Load Image
Advertisement

தசைகளின் இறுக்கத்தை தளர்த்தும் தோப்புக்கரணம்

கால் முட்டி, தசைகளில் உண்டாகும் வலி, வயது வித்தியாசமின்றி அனைவரையும் பாதிக்கும். குறிப்பாக, கம்ப்யூட்டர் முன்பு நீண்டநேரம் அமர்ந்து வேலை செய்பவர்களை அதிகம் பாதிக்கிறது. மற்ற நாட்களை விட, குளிர் அதிகம் இருக்கும்போது, பாதிப்பு அதிகம் இருக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

குளிர்காலத்தில், காற்றில் உள்ள அதிக ஈரப்பதத்தினால் உடலின் தசை நார்களின் இயக்கத்தில் மாற்றம் ஏற்படுகிறது. உடல் வெப்பத்தை குறைத்து மூட்டுகளை சுற்றியுள்ள தசை, தசை நார்கள், குருத்தெலும்புகளில் இறுக்கத்தை ஏற்படுத்தும். ரத்த நாளங்கள் சுருங்குவதால், ரத்த ஓட்டம் சீராக இல்லாமல், மூட்டுகளில் வலி, வீக்கத்தை ஏற்படுத்துகிறது.

தேவையான அளவு தண்ணீர் குடிப்பதால், நீரிழப்பால் உண்டாகும் மூட்டுகளின், இறுக்கத்தை தடுக்கலாம். உணவால் கிடைக்கக்கூடிய சத்துக்களின் குறைபாட்டாலும் வலி உண்டாகக் கூடும். அக்ரூட் பருப்புகள், வெண்ணெய், மீன், போன்ற ஒமேகா-3 நிறைந்த உணவுகள், 'விட்டமின் - டி' நிறைந்த காளான், பால் பொருட்களை சாப்பிட வேண்டும்.

மூட்டுகளில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தும் வகைகளான காலணிகளை அணிவது, உடலின் மேல் பாகத்தில் அதிக கனமான எடை கொண்ட பொருட்களை துாக்குவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

பிசியோதெரபி பயிற்சி, பராபின் குளியல், ஹீட்டிங் பேட் ஆகியவற்றின் வழியாகவும் வலியை குறைக்க முடியும். மூட்டு வலி இருக்கும் போது சுடு தண்ணீர், உப்புக்கல் ஒத்தடம் தரலாம். படுக்கப் போகுமுன் கிரிப் பேண்டேஜ் சுற்றிக்கொண்டு படுக்கலாம். வெது வெதுப்பான நீரில் கை, கால்களை சில மணித்துளிகள் வைத்திருப்பது வலி, வீக்கத்தை தணிக்கும். தோப்புக்கரணம் முடிந்த வரை போடுவதால், ரத்த ஓட்டம் அதிகரிக்கும். மூட்டுக்களில் விறைப்புத்தன்மை ஏற்படாமல் பாதுகாக்கும். ஒரே இடத்தில் உட்காராமல், அரை மணி நேரத்திற்கு ஒரு முறை, 50 அடிகள் நடப்பது, உடல் சுறுசுறுப்பாக, தசைகள் இறுக்கம் இன்றி இருக்க உதவும்.

எஸ். சசிகலா,
பிசியோதெரபிஸ்ட்,
சென்னை
போன்: 90808 22270



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement