Load Image
Advertisement

குழந்தை பருவத்திலேயே சேரும் கொழுப்பு

கடந்த ஆண்டில் மட்டும் நாடு முழுதும் 56,653 எதிர்பாராத இறப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு முந்தைய ஆண்டை விட 12 சதவீதம் அதிகம். இவர்களில் 45 - 60 வயதிற்குட்பட்ட 57 சதவீதம் பேர் மாரடைப்பு, மூளையில் ஏற்பட்ட ரத்தக் கசிவால் இறந்துள்ளனர். இந்த மரணங்களுக்கு கொரோனா தடுப்பூசி எந்தவிதத்திலும் காரணம் இல்லை என்பதை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் உறுதி செய்துள்ளளது.

குறிப்பிட்ட காரணத்தால் தான் மாரடைப்பு ஏற்பட்டது என்று சொல்ல முடியாது. சில மரபியல் காரணிகளால் வருபவை; வேறு சில வாழ்க்கை முறை மாற்றத்தால் வருபவை. மரபியல் காரணிகளை நம்மால் மாற்றி அமைக்க முடியாது; சுற்றுச்சூழல், வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ள முடியும். மரபியல் காரணிகள், சர்க்கரை கோளாறு, உயர் ரத்த அழுத்தம் இருந்தால், ரத்தக் குழாயில் அடைப்புகள் மெதுவாக உருவாகி, எரிமலை குழம்பு போன்று உள்ளேயே அமைதியாக இருக்கும்; எதிர்பாராமல் வெடிக்கும்.


'பி-ளாக்'

சிறிய வயதில் இருந்தே, 'கொரோனரி ஆர்ட்டரி' எனப்படும் பிரதான ரத்தக் குழாயில் கொழுப்பு படிந்து கொண்டே இருக்கும். இதயக் கோளாறுக்கான மரபணு இருப்பவர்களுக்கு, கொழுப்பு படிவது மற்றவர்களைக் காட்டிலும் கூடுதலாக இருக்கும். குழந்தைப் பருவத்தில் இருந்தே சரியாக உடற்பயிற்சி செய்யாமல், கொழுப்பு சத்து நிறைந்த, பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகம் சாப்பிடும் போது, ரத்தக் குழாயில் கொழுப்பு அதிகமாக படியும். இதற்கு, 'பிளாக்' என்று பெயர்.

எதிர்பாராத மன அழுத்தம், நம் உடம்பு பழக்கப்படாத கடினமான வேலை செய்வது போன்ற சூழலில் இயல்பான ரத்த ஓட்டத்தில் தடை ஏற்பட்டு, ரத்த அழுத்தம் அதிகரிக்கும். இதயம் இயல்பைவிட வேகமாக 'பம்ப்' செய்யும். இதனால், ரத்தக் குழாயில் படிந்த பிளாக் சிதைந்து உறையும் ரத்தம், ரத்த ஓட்டத்தை தடை செய்யும். இது தவிர, ரத்தக் குழாய் முழுதும் கொழுப்பு அடைத்து இருந்தாலும் ரத்த ஓட்டம் தடைபடும்.

இதயத்திற்கு செல்லும் ரத்தக் குழாயில் பிரதானமான கொரோனரி ரத்தக் குழாய், அதிலிருந்து பிரிந்து செல்லும் கிளை ரத்தக் குழாய்களும் உள்ளன. பிரதான குழாயில் அடைப்பு ஏற்பட்டால், இதயம் முழுமைக்கும் ரத்தம் செல்வது தடைபட்டு இதயம் செயலிழக்கும்.

கிளை ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டால், இதயத்தின் சிறிய பகுதி மட்டுமே பாதிக்கப்படும். அந்த சமயத்தில் மார்பு பகுதியில் வலி வருவது, தாடை, கழுத்து வலி போன்ற அறிகுறிகள் தெரியும். பரிசோதனைகள் செய்தால், எந்த இடத்தில் அடைப்பு ஏற்பட்டுள்ளது என்று தெரிந்து விடும்.

வெளித் தோற்றத்திற்கும், உடலின் உள்செயல்பாடுகளுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. வெளித் தோற்றத்தில் ஆரோக்கியமாக இருப்பதால் எல்லாம் நன்றாக இருக்கிறது என்று சொல்லிவிட முடியாது.


மரபணு

இதயக் கோளாறை உருவாக்கும் மரபணு இருந்தால், குழந்தைப் பருவத்தில் இருந்தே முறையான உணவு பழக்கம், உடற்பயிற்சி செய்து, ரத்த அழுத்தம், ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். மன அழுத்தம் இல்லாமல் இருப்பது அவசியம். மரபியல் காரணியால் ஏற்படும் எதிர்பாராத மாரடைப்பில், இதயத்தின் மின் அலைகளில் ஸ்திரமற்ற தன்மை ஏற்பட்டு, இதயம் செயலிழந்து விடும்.


உடற்பயிற்சி

'டிரெக்கிங்' செல்லும் போது, ஆக்சிஜன் குறைவாக இருப்பதால் இதயம் இயல்பை விட கூடுதலாக 'பம்ப்' செய்ய வேண்டியிருக்கும். இதனால், மன அழுத்தம் அதிகமாகும். ஏற்கனவே பலவீனமாக ஏதாவது பிரச்னை இருந்தால், இன்னும் பலவீனமாகி, இதயச் செயலிழப்பு வரலாம். எனவே, பயிற்சி செய்த பின் போவது பாதுகாப்பானது.

- என்.சி.ஆர்.பி., என்ற 'நேஷனல் கிரைம் ரெக்கார்ட்ஸ் பியரோ'வாசகர் கருத்து (1)

  • Rama Lingam - chennai,இந்தியா

    இந்த அலோபதி அயோக்கிய பயல்கள் தடுப்பூசியால்தான் மாரடைப்பு வந்தது என்பதை எப்படி ஒத்துக்கொள்வாrகள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement