Load Image
Advertisement

நெற்பயிரின் 'நண்பேன்டா' சிலந்தி

விவசாயிகளின் நண்பன் மண்புழு மட்டுமல்ல சிலந்திகளும் தான்.
நெற்பயிர்களில் சேதம் விளைவித்து மகசூலைக் குறைத்து தீமை விளைவிக்கும் பூச்சிகளை பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்தாமலேயே அழித்து விவசாயிகளுக்கு நன்மை தரும் பூச்சிகள் உள்ளன. இவை இயற்கையாகவே ஒவ்வொரு வயலிலும் பல்கிப்பெருகி உள்ளது.

பூச்சியினம் இல்லாத எட்டு கால் பூச்சி என்று அழைக்கப்படும் சிலந்திகளும் விவசாயிகளுக்கு நன்மை செய்கின்றன. நெற்பயிர்களுக்கு தீங்கு செய்யும் பூச்சியினங்களை தனக்கு உணவாக்கிக் கொள்கின்றன. தன் அளவை விட பெரிதாக பூச்சியினங்களையும் தாக்கி உண்ணக்கூடியது சிலந்தி.

நெற்பயிரில் அதிக சேதம் விளைவிக்கக்கூடிய தத்துப்பூச்சி, இலைமடக்குப்புழு, தண்டு துளைப்பான் மற்றும் இலைகளை உண்ணும் புழுக்களை சிலந்திகள் உண்கின்றன. விவசாயிகளுக்கு தெரியாமலேயே பயிர்களின் பொருளாதார சேதத்தை சிலந்திகள் குறைத்து விடுகின்றன.

இதுவரை 6 குடும்பங்களைச் சேர்ந்த 30 வகையான சிலந்திகள் நெற்பயிர்களுக்கு நன்மை செய்வது ஆராய்ச்சிகள் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. தமிழகத்தின் நெற்பயிர்களில் பாராடோசா சூடோஅன்னுலேட்டா, ஆக்சியோபஸ் ஜவானஸ், டெட்ராகினாத்தா ஜவானா வகையைச் சேர்ந்த விவசாயிகளுக்கு நன்மை செய்யும் சிலந்திகள் கண்டறியப்பட்டுள்ளன.
நெற்பயிர்களில் இருப்பது எல்லாமே நன்மை செய்யும் சிலந்திகள் தான். இவையும் பயிர்களை சேதப்படுத்துவதாக எண்ணி விவசாயிகள் பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து அவற்றை அழிக்கின்றனர். நெற்பயிர்களில் நாற்று நட்டது முதல் அறுவடை வரை சிலந்தி வலை பின்னப்பட்டிருக்கும். சிலந்திகள் இருந்தால் மருந்து தெளிக்க வேண்டாம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். பெரும்பாலான விவசாயிகள் கண்ணில் படும் ஒன்றிரண்டு பூச்சிகளைக் கூட கட்டுப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் அடிக்கடி பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்துகின்றனர். இதனால் நன்மை செய்யும் பூச்சிகளும் சிலந்திகளும் சேர்ந்து அழிந்து விடுகின்றன. உணவும் விஷமாக மாறி விடுகிறது. தேவைக்கேற்ப, விஞ்ஞானிகள் பரிந்துரைத்த அளவு மட்டும் பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தினால் நன்மை செய்யும் சிலந்திகளைக் காக்கலாம்.
- விஷ்ணுப்ரியா இணைப்பேராசிரியை பூச்சியியல் துறை
சேதுபாஸ்கரா
வேளாண் கல்லுாரி
காரைக்குடி. 94425 42476



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement