Load Image
Advertisement

தானிய வடை!

தேவையான பொருட்கள்:

கொள்ளு, சோளம், மொச்சை - தலா 100 கிராம்

எண்ணெய் - 500 கிராம்

காய்ந்த மிளகாய் - 1

இஞ்சி, புதினா, கொத்தமல்லி - சிறிதளவு

உப்பு, தண்ணீர் - தேவையான அளவு.

செய்முறை:

கொள்ளு, சோளத்தை முளை கட்டவும். மொச்சையை ஊற வைக்கவும். இவற்றுடன் காய்ந்த மிளகாய், தோல் நீக்கிய இஞ்சி, உப்பு சேர்த்து கெட்டியாக அரைக்கவும். பின், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, புதினா சேர்த்து பிசையவும்.

வாணலியில், எண்ணெய் காய்ந்ததும், மாவை வடைகளாக தட்டி போட்டு, பொன்னிறமாக வேக வைத்து எடுக்கவும். சுவை மிக்க, 'தானிய வடை!' தயார். அனைத்து வயதினரும் விரும்பி உண்பர்.

- எம்.நிர்மலா மகாதேவன், விழுப்புரம்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement