Load Image
Advertisement

கார்த்திகை பட்டத்தில் தர்ப்பூசணி சாகுபடி

கார்த்திகை பட்டத்தில், தர்ப்பூசணி சாகுபடி செய்வது குறித்து, காஞ்சிபுரம் மாவட்ட விதை பரிசோதனை நிலைய அலுவலர் கு.ஜெயராமன் கூறியதாவது:

கார்த்திகை மற்றும் மார்கழி ஆகிய மாதங்களில், தரமான தர்ப்பூசணி விதைகளை தேர்வு செய்து, சாகுபடி செய்தால் பூச்சி நோய் தாக்குதல் இன்றி நல்ல மகசூல் பெற முடியும்.

'டிராகன் கிங், அர்க்கா ஐஸ்வர்யா, மாதுரி -64, அபூர்வா, சுகர் குயின்' ஆகிய அதிக மகசூல் தரக்கூடிய தர்ப்பூசணி ரகங்களை தேர்வு செய்து, சாகுபடி செய்ய வேண்டும்.குறிப்பாக, தர்ப்பூசணி விதைகளை விதைக்கும் முன், விதை நேர்த்தி செய்ய வேண்டும். 1 ஏக்கருக்கு, 1 கிலோ விதை போதுமானது.

இந்த விதையை, மிதமான வெந்நீரில், 12 மணி நேரம் ஊற வைத்த பின், 4 கிராம் டிவிரிடி அல்லது 10 கிராம் சூடோமோனஸ் கலந்து விதை நேர்த்தி செய்து, விதைக்க வேண்டும்.விதைத்த இரு மாதங்களில் அறுவடைக்கு வந்துவிடும். ஒவ்வொரு பழமும், 4 - 12 கிலோ வரையில் எடை கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புக்கு: கு.ஜெயராமன்,
95974 42347.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement