Load Image
Advertisement

மாமரங்களில் தத்துப்பூச்சிக் கட்டுப்பாடு

மாமரங்கள் டிசம்பரில் தொடங்கி பிப்ரவரி, மார்ச் வரை பூத்துக் கொண்டிருக்கும். மாமரங்களைத் தாக்கும் பூச்சிகளைப் பற்றி தெரிந்து கொண்டால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மூலம் மா விளைச்சலை அதிகரிக்கலாம்.

மா விளைச்சலைக்குறைக்கும் முக்கியப் பூச்சிகளில் ஒன்று தத்துப்பூச்சி. மாமரத்தின் பூங்கொத்துகளில் இவை முட்டையிடுகிறது. பூக்கும் தருணத்தில் குஞ்சுகளும் தத்துப்பூச்சியும் பூங்கொத்துகளின் சாற்றை உறிஞ்சுவதால் பூக்கள் வாடி கருகி உதிர்ந்து விடுகின்றன. பிஞ்சுகள் பிடித்தாலும் சிறு பிஞ்சுகள் உதிர்ந்து விடும். குஞ்சுகள் தேன் போன்ற திரவத்தை இலையின் மேற்பரப்பில் சுரப்பதால் இலைகளில் கரும்பூசணம் படர்கிறது. இதனால் ஒளிச்சேர்க்கை பாதித்து மகசூல் குறைகிறது.

இப்பூச்சியைக் கட்டுப்படுத்த தோட்டத்தில் களைகளை அகற்றி சுத்தமாக பராமரிக்க வேண்டும். ஒரு பூங்கொத்தில் 5க்கும் மேற்பட்ட தத்துப்பூச்சிகள் இருந்தால் 'இமிடாகுளோப்ரிட்' மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரீல் 0.3 மி.லி. கலந்து ஆரம்ப நிலையிலேயே தெளிக்கவேண்டும். பிஞ்சு உருவாகும் போது 'தையாமத்தாக்சைம்' மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் 0.2 கிராம் கலந்து தெளிக்கலாம்.

அல்லது 'அசிபேட்' மருந்தை 1.5 கிராம் அல்லது 'பாசலோன்' மருந்தை 1.5 மி.லி. என்ற வீதத்தில் மரம் பூக்க ஆரம்பித்ததில் இருந்து 15 நாள் இடைவெளியில் 2 முதல் 3 முறை தெளிக்கவேண்டும்.

-விஷ்ணுப்ரியா இணைப்பேராசிரியை பூச்சியியல் துறை, சேது பாஸ்கரா வேளாண்மை கல்லுாரி காரைக்குடி, 96260 92408



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement