Load Image
Advertisement

முயல்களின் இனப்பெருக்க காலம் அறிந்து கொள்ள சில 'டிப்ஸ்!'

முயல்களின் இனப்பெருக்க காலம் அறிவது குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், ஏனாத்துார் உழவர் பயிற்சி நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் கே.பிரேமவல்லி கூறியதாவது:

காற்றோட்டமான அறை, கூண்டு, பரண் மீது முயல் வளர்ப்பு என, பல விதங்களில், முயல்களை வளர்க்கலாம். பொதுவாக, 10 பெண் முயலுக்கு, ஒரு ஆண் முயல் என்கிற விகிதத்தில் வளர்க்க வேண்டும்.

ஆண், பெண் என, இரு விதமான முயல்களை தனித்தனியாக வளர்க்க வேண்டும்.முயல்களின் இனப்பெருக்க காலத்தை, பண்ணையாளர்கள் சரியாக தெரிந்து வைத்திருக்க வேண்டும். அப்போது தான் முயல் வளர்ப்பில் கணிசமான வருவாய் ஈட்ட முடியும். சில நேரங்களில் முயல்களின் இனப்பெருக்க காலத்தை, பண்ணையாளர்களுக்கு தெரியாமலேயே போய் விடும்.

இதை தவிர்க்க, முயல் இனப்பெருக்க காலத்திற்கு வந்துவிட்டால், வாய் பகுதியை அடிக்கடி தரை மற்றும் கம்பி பகுதியில் தேய்த்துக் கொள்ளும்.

வாலை ஒருபுறமாக துாக்கி வைத்துக் கொள்ளும். தரைப்பகுதியில் ஒரு புறமாக சாய்ந்து படுத்துக் கொள்ளும் உள்ளிட்ட பல்வேறு சேட்டைகளை செய்யும்.

இதுபோன்ற காலங்களில், பெண் முயல்களிடத்தில், ஆண் முயல்களை விட்டுவிட வேண்டும். இனப்பெருக்கம் காலம் முடிந்த பின், ஆண் முயலை தனியாக பிரித்து, மற்றொரு கூண்டில் அடைத்து விட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புக்கு: கே.பிரேமவல்லி,
97907 53594.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement