Load Image
Advertisement

நல்ல வருவாய் தரும் நக்குவாரி ரக தென்னை

நக்குவாரி ரக தென்னை சாகுபடி குறித்து, செங்கல்பட்டு மாவட்டம், கரும்பூர் கிராமத்தைச் சேர்ந்த செடிகள் உற்பத்தி செய்யும் விவசாயி கே.சசிகலா கூறியதாவது:

நக்குவாரி ரக தென்னை என்பது, பழங்காலத்தில் சாகுபடி செய்த பாரம்பரிய தென்னை ரகமாகும். இதன் காய் பச்சை நிறத்தில், இளநீருக்கு மட்டுமே பயன்படக்கூடிய ரகமாகும்.

குறிப்பாக, தென் மாவட்டங்களில் சாகுபடி செய்யப்படும் குட்டை ரக தென்னையாகும். நம்மூர் களிமண் மற்றும் செம்மண் நிலங்களில், தாராளமாக சாகுபடி செய்ய முடியும். தென்னை சாகுபடிக்கு ஏற்ப உர நிர்வாகத்தை முறையாக கையாண்டால், 2 - 30 ஆண்டுகள் வரையில் மகசூல் கிடைக்கும்.

இந்த ரக தென்னையில், மருத்துவ குணங்கள் அடங்கி இருப்பதால், இளநீருக்கு சந்தையில் நல்ல வரவேற்பு மற்றும் வருவாய்க்கு பஞ்சம் இருக்காது.

இந்த ரக தென்னை, 10 அடி உயரத்திற்கு குறைவாகவே வளர்ச்சி இருக்கும். இளநீர் அறுவடை செய்வதற்கு சவுகரியமாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புக்கு: கே.சசிகலா,
94441 20032.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement