Load Image
Advertisement

மன ஊனம்!

விருதுநகர் மாவட்டம், அருப்புக் கோட்டை, தேவாங்கர் மேல்நிலைப் பள்ளியில், 1990ல், 6ம் வகுப்பு படித்த போது நடந்த சம்பவம்!

வகுப்பாசிரியை செல்லம்மாள், ஆங்கில பாடம் நடத்துவதில் வல்லவர். உடன் படித்த தங்கராசு, பேச்சுத்திறனில் குறைபாடுள்ளவன்; திக்கி திக்கி தடுமாறியபடி பேசுவான். அவன் மீது தனி கவனம் செலுத்தி மேம்படுத்தி வந்தார்.

திடீரென சில நாட்களாக அவன் வகுப்புக்கு வரவில்லை. விசாரித்ததில், 'திக்குவாய் தங்கராசு... நீ, ஒரு மக்கு...' என, பள்ளியில் கிண்டல் செய்ததால், மனம் உடைந்து, வீட்டில் முடங்கி விட்டதாக அறிந்தார்.

வார விடுமுறையில், வீடு தேடி சென்று, அவன் பெற்றோரிடம் பேசி, மீண்டும் அழைத்து வந்தார். இறைவணக்க கூட்டத்தில், 'உடல் ஊனம் பற்றி கேலி பேசுவோர், மன ஊனத்திற்கு சொந்தகாரர்கள். மாற்றுத் திறனாளிகளுக்கு இயன்ற உதவிகளை செய்யும் எண்ணத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்...' என அறிவுரை கூறினார்.

என் வயது, 43; தனியார், நுாற்பு ஆலையில் பணிபுரிந்தேன். அந்த ஆசிரியையின் அடியொற்றி, மாற்றுத் திறனாளிகளிடம் அன்பு பாராட்டி இயன்ற உதவிகளை செய்து வருகிறேன்.

- ஆர்.ஜமுனா ராணி, விருதுநகர்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement