Load Image
Advertisement

வேளாண்மையில் செயற்கை நுண்ணறிவு பயன்பாடு

விவசாய உற்பத்தியை அதிகரிக்க விவசாயிகளுக்கு உதவும் வகையிலான செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.,) போன்ற அதிநவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டியதன் அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவு என்பது மனிதர்களைப் போல் சிந்திக்கவும் செயல்களைப் பிரதிபலிக்கவும் திட்டமிடப்பட்ட இயந்திரங்களில் மனித நுண்ணறிவின் உருவகப்படுத்துதலைக் குறிக்கிறது.

விவசாயத்தில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதன் தனித்துவமான நன்மை என்னவென்றால், காட்சிப் பரிசோதனையின் அடிப்படையில் விவசாயிகள், நிபுணர்கள் எடுக்கும் முடிவுகளைப் போலன்றி தரவுகளின் அளவு மதிப்பீட்டின் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்படுகின்றன.

ஏ.ஐ., கருவியை பயன்படுத்தி விவசாய பொருட்களின் தேவை மற்றும் விநியோக அளவை முன்னறிவிப்பு செய்வதன் மூலம் உற்பத்தியாளர்களுக்கு விலை மதிப்பின் பங்கை உணர்த்தமுடியும். மண்ணின் ஆரோக்கியத்தை கண்காணித்து மறுசீரமைப்பு செய்ய முடியும். பயிர் ஆரோக்கியத்தை கண்காணிக்க முடியும். விதைப்பு, பூச்சி கட்டுப்பாடு, உரத்தேவை போன்ற நிகழ்நேர ஆலோசனைகளை வழங்க முடியும். வானிலை, வெப்பநிலை, நீர் மற்றும் மண் நிலைகளை பகுப்பாய்வு செய்யலாம். பருவகால முன்னறிவிப்பு மாதிரிகளை உருவாக்குவதன் மூலம் விவசாயத்தில் துல்லியத்தை மேம்படுத்தி உற்பத்தியை அதிகரிக்கலாம்.

நிடி ஆயோக், ஐ.பி.எம்., அமைப்புகள் நோய்கள், பூச்சிகள் மற்றும் மோசமான தாவர ஊட்டச்சத்தை கண்டறிய ஏ.ஐ. அடிப்படையிலான பயிர் மகசூல் முன்கணிப்பு மாதிரியை உருவாக்க ஒத்துழைத்துள்ளன. இதன் மூலம் வேலையாட்கள் பற்றாக்குறையை சமாளிக்கலாம். மனிதரை போலவே வாடிக்கையாளருடன் பேசுவதற்கான கம்ப்யூட்டர் மூலம் விவசாயிகளின் பிரச்னைகளுக்கு பரிந்துரை, ஆலோசனைகளை வழங்க முடியும். விவசாயத்தில் இயந்திரமயமாக்கலின் செயல்திறனை அதிகரிக்க முடியும்.


எம் - வேளாண்மை

'மொபைல் அக்ரிகல்ச்சர்' என்பதே எம் - வேளாண்மை. ஏ.ஐ. அடிப்படையிலான இருமொழி ஆலோசனை, முடிவு எடுப்பது போன்ற சேவைகளுக்காக ஆண்ட்ராய்டு அலைபேசி மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் முக்கிய பயிர்களில் ஒன்றான நெல்லில் பூச்சி, நோய்களால் பயிர் சேதத்தின் அறிகுறிகளை உடனடியாகக் கண்டறிந்து நம்பகமான மற்றும் செலவு குறைந்த ஆலோசனைகளை இந்த செயலி வழங்கும்.

இந்த செயலி விவசாயிகள் உபயோகிப்பதற்கு எளிதாக இருக்கும். விவசாயிகளின் கருத்துகளை பதிவு செய்து, சேகரிப்பதோடு அறிவியல் வல்லுநர்களுடன் தொடர்பு கொள்ளும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் மற்றும் விவசாய விரிவாக்க வல்லுநர்கள் இருவரும் விவசாயத்தில் தேவையான முடிவை அணுகுவதற்கு இந்த செயலி உதவுவதோடு, தமிழகத்தில் லாபகரமான மற்றும் நிலையான விவசாயம் உருவாக்குவதற்கும் உதவும்.

எம் - வேளாண்மை செயலி விவசாயிகள் மற்றும் விவசாய நிபுணர்கள் இருவரும் பயன்பெறும் முறையில் பயன்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளது. இருமொழி இயக்க முறை, படங்கள், குரல், உரை போன்ற பல்வேறு வடிவங்களில் உரையாடல் பதிவு செய்யலாம். செயற்கை நுண்ணறிவு அடிப்படையில் விவசாயிகளுக்கு உடனடி பயிர் பாதுகாப்பு ஆலோசனை வழங்க முடியும்.

விவசாயிகள், வேளாண் பல்கலை விஞ்ஞானிகளுக்கு இடையே உரை மற்றும் குரல் உள்ளீடு மூலம் உரையாடல் தளம் அமைக்கப்படும். பயிர் கண்காணிப்புக்கு தினசரி, வாராந்திர அடிப்படையில் தொடர்ச்சியான அறிவிப்புகள், பயிர் சாகுபடி நடைமுறைகள் பற்றிய வழிகாட்டுதல் செய்யப்படும்.

எம் - வேளாண்மை விவசாயிகளின் பிரச்னைகளை தீர்க்க தொழில்நுட்ப பரிமாற்ற வழிமுறையாக செயல்படும். இது நிபுணர்களை சென்றடைவதில் விவசாயிகளின் நேரத்தையும் செலவையும் மிச்சப்படுத்துகிறது. விவசாயிகளுக்கு தேவையான சந்தை மற்றும் வானிலை சார்ந்த தகவல் தேவைகளை பூர்த்தி செய்கிறது. எம் - வேளாண்மை செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

- கார்த்திகேயன் தலைவர்விவசாய விரிவாக்கம் மற்றும் கிராமப்புற சமூகவியல் துறை தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கோவை - 641 003வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement