* ரோஸ்ட் செய்யும் கறிகளில், எண்ணெய் அதிகமாகி விட்டால், கறிகளின் மேல் ஒரு தேக்கரண்டி அரிசி மாவை துாவலாம். அதிகப்படியான எண்ணெயை அரிசி மாவு உறிஞ்சி, கறியும் மொறு மொறுப்பாகவும், சுவையாகவும் இருக்கும்
* ரசத்தில் புளி குறைந்து விட்டால், கைவசம் மாங்காய் பொடி இருந்தால், கால் தேக்கரண்டி சேர்க்கலாம்
* இட்லி மாவு ரொம்பவும் புளித்து விட்டால், ஒரு டம்ளர் பால் ஊற்றினால், புளிப்பு நீங்கி விடும். தேங்காய் சட்னியில் உப்பு அதிகமாகி விட்டால், உருளைக்கிழங்கை இரண்டாக வெட்டி போட்டால் சரியாகி விடும்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!