பீட்ரூட் சாறு எடுத்து, தேனுடன் கலந்து சாப்பிட்டு வர, அல்சர் நோய் குணமாகும்.
தலை நரை வர காரணம், வைட்டமின், 'கே' சத்து குறைவு தான். பீட்ரூட்டில் வைட்டமின், 'கே' சத்து மிகுந்த அளவில் உள்ளது. பீட்ரூட்டை தொடர்ந்து உணவில் சேர்த்து சாப்பிட்டு வர, இளநரை மறையும்.
பீட்ரூட்டால் தயார் செய்த கூட்டு, மலச்சிக்கலை நீக்கி, ரத்த சோகையை குணப்படுத்தும்.
பீட்ரூட் சாறுடன் வெள்ளரிச் சாறு கலந்து சாப்பிட்டு வர, சிறுநீரகங்களும், பித்தப்பையும் சுத்திகரிக்கப்படும்.
உதட்டில் வரக்கூடிய வெடிப்பை தவிர்க்க, பீட்ரூட் சாறு மருந்து போல் செயல்படும்.
பீட்ரூட் உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால், கிட்னியில் கற்கள் உருவாவதை தடுக்கலாம்.
பல மாதங்களாக மலச்சிக்கல் மற்றும் மூலக்கோளாறு பாதிப்புள்ளோர், பீட்ரூட் சாறை தண்ணீருடன் கலந்து, இரவு படுக்க செல்லும் முன், அரை டம்ளர் அருந்தினால், அந்நோய்க்கு தீர்வு கிடைக்கும்.
பீட்ரூட் சாற்றில் சிறிது கிளிசரின், தேன், லைம் ஆயில் ஐந்து சொட்டுகள் கலந்து, பஞ்சில் தொட்டு உதட்டில் ஒற்றி ஒற்றி எடுக்கவும். ஒரு வாரத்தில் உதடுகள் கருமை நிறம் மாறி விடும்.
தீப்பட்ட இடத்தில் பீட்ரூட் சாறை தடவினால், கொப்புளம் ஆகாமல் விரைவில் புண் ஆறும்.
பீட்ரூட்டில் உள்ள இரும்புச்சத்து, நம் உடலில் புதிதாக ரத்த அணுக்கள் உருவாக துணை புரிகிறது.
தோலில் ஏற்படும் அரிப்பு, எரிச்சல் போன்றவற்றுக்கு இரண்டு பங்கு பீட்ரூட் சாறுடன், ஒரு பங்கு தண்ணீரை கலந்து பூசி வர, பிரச்னையிலிருந்து விடுபடலாம்.
பீட்ரூட்டை நறுக்கி, பச்சையாக எலுமிச்சை சாற்றில் தோய்த்து உண்டு வர, ரத்தத்தில் சிவப்பணுக்கள் உற்பத்தியாகும்.
பீட்ரூட் தோல் நீக்கி, பொடியாக நறுக்கி மிக்சியில் விழுதாக அரைத்து இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் கலந்து முகம், கை, பாதங்களில் பூசி, ஒரு மணி நேரம் ஊறியபின் கழுவினால், சருமம் பளிச்சிடும்.
பீட்ரூட் வேக வைத்த நீரில் வினீகரை கலந்து சொறி, பொடுகு, ஆறாத புண்கள் மேல் பூசி வர அனைத்தும் குணமாகும். தொகுப்பு: எச்.சீதாலட்சுமி
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!