பார்சிலோனா நகரில், மிகவும் பழமை வாய்ந்த, 'க்யூரிஸ் முரியா' என்ற ஷாப்பிங் மால் உள்ளது; இது, 1896 முதல் இயங்கி வருகிறது. இதன் கட்டுமானம், உள் அலங்காரம் ஆகியவை மிகவும் ஆச்சரியப்படத்தக்க வகையில் இருக்கும். இவற்றை பார்த்து ரசிப்பதற்காகவே, தினமும் ஆயிரக்கணக்கானோர் வருவதுண்டு.
இவ்வாறு வருவோரில் பெரும்பாலானோர், பொருட்கள் எதுவும் வாங்காமல் வேடிக்கை மட்டும் பார்த்து, 'செல்பி' எடுத்து செல்கின்றனர். இதனால் போதிய வருவாய் இல்லாமல் கவலைப்பட்டு வந்த, இதன் உரிமையாளர், தற்போது அதிரடியாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
'ஷாப்பிங் மாலுக்குள் பொருட்கள் வாங்காமல் வேடிக்கை மட்டும் பார்க்க வருவோரிடம், 450 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும்...' என, அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு, பார்வையாளர்களிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.
— ஜோல்னாபையன்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!