உடலில் சிறு ஊனம் என்றாலே, நம்மில் பலர் சோர்ந்து விடுவோம். ஆனால், இரு கைகள் இல்லாவிட்டாலும், அதை குறையாக எண்ணாமல் சாதனை படைத்து வருகிறார், முகமது அசீம் என்ற, 17 வயது இளைஞர்.
கேரள மாநிலம், கோழிக்கோடு, வெளிவண்ண கிராமத்தை சேர்ந்த இவர், பிறக்கும்போதே இரு கைகளின்றி பிறந்தார். கைகள் இல்லாத குறை தெரியாமல் வளர்த்தனர், இவரது பெற்றோர். மகனுக்கு நீச்சல் கற்றுக்கொடுக்க துவங்கியபோது, பலர் ஏளனம் செய்தனர். எனினும், அதை பொருட்படுத்தவில்லை.
இன்று, பல மணி நேரம் தண்ணீரில் மிதந்து, கால்களை அசைத்து, வெகு துாரம் நீச்சலடித்து, சாதனை புரிந்து வருகிறார், முகமது அசீம்.
ஜோல்னாபையன்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!