ரத்த சோகையால் பாதிக்கப்பட்டோர் தொடர்ந்து, கொய்யாப் பழம் சாப்பிட்டு நலம் பெறலாம்.
இதை கடித்து சாப்பிடுவதால், பற்களும், ஈறுகளும் பலம் பெறும். சாலட் செய்து சாப்பிட்டால், உடல் குளிர்ச்சி அடையும்.
கொய்யா காயை தொடர்ந்து சாப்பிட்டால், ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைய வாய்ப்பு இருப்பதாக கூறுகின்றனர் மருத்துவர்கள்.
இது, பெருங்குடலை நச்சுத்தன்மையில் இருந்து காக்கிறது. ஆப்பிளை விட, அதிகமான சத்துக்கள் உள்ளன.
ஆரஞ்சுப் பழத்துடன் ஒப்பிட்டால், வைட்டமின் - சி சத்து கொய்யாவில், நான்கு மடங்கு அதிகம்.
கொய்யாவுடன், தேன் கலந்து சாப்பிட்டு வர உடல் வலுப்பெறும்; ரத்தம் சுத்தமாகும்.
கொய்யாவின் சிவப்பு நிறத்திற்கு காரணம், 'கரோட்டீனாய்டு' என்ற பொருள். புகை, மதுப்பழக்கம் உள்ளோர், தினமும், கொய்யா சாப்பிட்டால் நன்மை கிடைக்கும். தோலுடன் சாப்பிட்டு வர, முகத்துக்கு பொலிவையும், அழகையும் தரும். தோல் வறட்சியும், முதுமைத் தோற்றமும் நீங்கும்.
நன்றாக பழுத்த கொய்யாவுடன், மிளகுத் துாள், எலுமிச்சை சாறு கலந்து உட்கொண்டால் பித்தம், சோர்வு நீங்கும்.
கொய்யா இலையை நீரில் கொதிக்க வைத்து குடித்தால், ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும்.
கொய்யாவில் இளம் தளிர் இலைகளை கழுவி, தண்ணீருடன் கொதிக்க விடவும். பின், குளிர வைத்து, வாய் கொப்பளிக்க பயன்படுத்தலாம்; வாய் துர்நாற்றம் பறந்து விடும்.
கொய்யாவில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், மலச்சிக்கலுக்கு எளிய தீர்வை தருகிறது. தொப்பையை குறைக்கும். அமிலத்தன்மை, நெஞ்சு எரிச்சல், புளித்த ஏப்பத்திற்கு தீர்வளிக்கும்; கண் கோளாறுகள் விலகும். சளித்தொல்லையை போக்கும்; இருமலுக்கு விடை தரும்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!