தேவையான பொருட்கள்:
நுங்கு - 15
கற்கண்டு - 150 கிராம்
பசும்பால் - 200 மி.லி.,
சாரப்பருப்பு - 1 தேக்கரண்டி
நெய், ஏலப்பொடி - சிறிதளவு.
செய்முறை:
நுங்கை, தோல் நீக்கி சுத்தம் செய்து, விழுதாக அரைக்கவும். பசும்பாலை காய்ச்சி, நுங்கு, பொடியாக்கிய கற்கண்டு சேர்த்து கொதிக்க விடவும். அதில், ஏலப்பொடி, நெய்யில் வறுத்த சாரப்பருப்பு சேர்க்கவும். சத்து நிறைந்த, 'நுங்கு கற்கண்டு பாயசம்!' தயார்.
சூடாக பருகினால் சுவை அள்ளும். குளிர வைத்தும் குடிக்கலாம். அனைத்து வயதினருக்கும் ஏற்றது.
- வி.கமலா, புதுச்சேரி.
தொடர்புக்கு: 91598 96695
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!