'மில்க் புரூட்' என அழைக்கப்படும் 'நுங்கு ஆப்பிள்' சாகுபடி குறித்து, திருவள்ளூர் மாவட்டம், ஸ்ரீகாளிகாபுரம் கிராமத்தைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர் எம்.ராஜிவ்காந்தி கூறியதாவது:
மா, பலா, கொய்யா உள்ளிட்ட பல வித பழ செடிகளை நட்டுள்ளேன். இதன் வாயிலாக ஆண்டுதோறும் கணிசமான வருவாய் ஈட்டி வருகிறேன்.
வரப்பு பயிராக வேங்கை, தேக்கு, மகோகனி, ஈட்டி உள்ளிட்ட மரங்களை சாகுபடி செய்துள்ளேன். அந்த வரிசையில், 'மில்க் புரூட்' என அழைக்கப்படும் 'நுங்கு ஆப்பிள்' சாகுபடி செய்துள்ளேன்.
இது, சப்போட்டா பழ குடும்பத்தைச் சேர்ந்தவையாகும். ஊதா மற்றும் வெள்ளை நிறம் என, இரு வித நிறங்கள் உடைய பழங்களாகும். 'மில்க் புரூட்' பழமான பின், 'நுங்கு' போல எடுத்து சாப்பிடலாம்.
இது, பல வித மருத்துவ குணம் நிறைந்திருப்பதால், வீட்டு தேவைக்கு போக சந்தையில் விற்பனை செய்யலாம். பொது மக்கள் சந்தையில் வாங்குவதற்கு தயக்கம் காட்டுவதில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு: எம்.ராஜிவ்காந்தி,
89402 22567.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!