Load Image
Advertisement

ஆண்டு முழுதும் மகசூலுக்கு திருச்சி மணப்பாறை ரக கத்திரி

திருச்சி மணப்பாறை கத்திரி சாகுபடி குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், படுநெல்லி கிராமத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி விவசாயி சே.கோகுல் கூறியதாவது:

ஒற்றை நாற்று நடவு முறையில், துாயமல்லி, சீரக சம்பா உள்ளிட்ட பல வித பாரம்பரிய ரக நெல் மற்றும் வெண்டை உள்ளிட்ட பல வித காய்கறிகளை ரசாயனம் இன்றி இயற்கை முறையில் சாகுபடி செய்து வருகிறேன்.

அந்த வரிசையில், திருச்சி மணப்பாறை கத்திரி, பவானி ஆகிய இரு ரக கத்திரிகாய் சாகுபடி செய்துள்ளேன்.

இந்த காய்கள் ஊதா மற்றும் வெள்ளை ஆகிய இரு நிறங்கள் கலந்த கலவையாகும். இந்த ரக கத்திரிக்காய் செடிகளை நட்டு, 90 நாளில் மகசூல் கொடுக்க துவங்கும். முதல் 6 மாதங்களில் தடையின்றி கத்திரிக்காய் அறுவடை செய்யலாம். கவாத்து என அழைக்கப்படும் செடிகளை வெட்டி விட்டு, துளிர்க்க ஆரம்பித்தால், மீண்டும் 6 மாதம் என, ஒரு ஆண்டு வரை கத்திரிக்காய் மகசூல் பெறலாம்.

இந்த கத்திரிக்காய் சாகுபடிக்கு, இயற்கை பயிர் ஊக்கிகள் மற்றும் எளிய பூச்சி விரட்டிகள் வாயிலாக, கத்திரிக்காய் சாகுபடியை இரட்டிப்பு ஆக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புக்கு: சே.கோகுல், 90878 02435.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement