Load Image
Advertisement

தோல் நோய்களை ஏற்படுத்தும் 'மில்க் ஷேக்'

முரண்பட்ட இரு சுவைகளில் உள்ள உணவுகளை சேர்த்து சாப்பிடுவதால் தான் பெரும்பாலும் தோல் கோளாறுகள் வருகின்றன. குறிப்பாக, தலையில் பொடுகு, தோல் தடித்து, சிவந்து, அரிப்பது, வறட்சி, அழற்சி போன்றவை. நோய் எதிர்ப்பு அமைப்பில் ஏற்படும் மாற்றத்தால் வருவது 'சோரியாசிஸ்' என்றாலும், அதை துாண்டும் காரணியும், தவறான உணவுப் பழக்கமும் தான்.
ஒன்றுக்கு ஒன்று முரண்பட்ட இரு சுவைகளில் உணவுகளை சேர்த்து சாப்பிட பழகி விட்டோம். உதாரணமாக, புளிப்பு, இனிப்பு சுவையுள்ள உணவுகளை சேர்த்து சாப்பிடுவது, 'மில்க் ஷேக்' என்ற பெயரில் ஸ்ட்ராபெர்ரி, கிவி போன்ற புளிப்பு தன்மையுள்ள பழங்களுடன் பால், சர்க்கரை சேர்த்து குடிப்பது. இவை நல்ல சுவையுடன் இருக்கலாம். ஆனால், உடலுக்கு குறிப்பாக தோலுக்கு ஆரோக்கியமான உணவுகள் இல்லை. இது போன்று நீளமான உணவுப் பட்டியலே உள்ளது. எந்த உணவு தோல் பிரச்னைகளை துாண்டுகிறது என்பதை தெரிந்து தவிர்க்க வேண்டியது முக்கியம்.

நம் சமூகத்தில் மீன் சாப்பிடும் பழக்கம் பெரும்பாலான மக்களிடம் உள்ளது. இதுவும், தோல் கோளாறுகளுக்கு முக்கிய காரணம்.
உளுந்து சேர்த்து செய்யும் எல்லா உணவுகளும் சிலருக்கு தோல் கோளாறுகளைத் துாண்டலாம். குறிப்பாக, இட்லி, வடை, தோசையுடன், கோதுமையில் பால், வெல்லம் சேர்த்து செய்த இனிப்புகளை சாப்பிடுவதால் பிரச்னை அதிகமாகலாம். அதிக எண்ணெய் சேர்த்த உணவுகள், கலோரி அதிகமுள்ள திரவ உணவுகளை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதாலும் தோல் நோய்கள் வரலாம்.

உடற்பயிற்சி
அலுவலக வேலை நிமித்தமாக உணவு சாப்பிட்டதும், அதிலும் அதிக கலோரி உள்ள உணவுகளை சாப்பிட்டதும் நீண்ட துாரம் நடந்து செல்வது, மன அழுத்தம், பதற்றம், பரபரப்பாக உள்ள நேரங்களிலும் கடுமையாக உடற்பயிற்சி செய்து விட்டு குளிர்ந்த நீரை பருகுவதும், தோல் நோய்கள் உண்டாக முக்கிய காரணம்.

டாக்டர் எம்.ஹரி கிருஷ்ணன்,
ஆயுர்வேத மருத்துவர், சென்னை
89399 33150



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement