Load Image
Advertisement

ரவுத்திர வீணை!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு...

'எல்லார்க்கும் எல்லாமும்'ங்கிற உங்க ஆட்சியில எங்களுக்கு மட்டும் ஏன் இந்த அநீதி?
கொள்ளிடம் ஆற்றங்கரையில மீன்பிடி தொழில் செய்ற என் கணவரை மூணு தடவை முதலைகள் தாக்கியிருக்கு! செப்டம்பர் 2012 முதல் சம்பவத்துல, வலதுகாலை முதலை கவ்வி படுகாயம். நிவாரணம் கேட்டு தஞ்சாவூர் ஆட்சியர்கிட்டே 2013 ஏப்ரல் 1ம் தேதி மனு கொடுத்தோம்; KK/13/05019 எண் கொண்ட ஒப்புகைச்சீட்டு கிடைச்சதோட சரி!

ஜூலை 2015, இரண்டாவது சம்பவத்துலேயும் அதே வலதுகால்ல காயம்; தஞ்சாவூர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை பரிசோதனை அறிக்கை எண்: 1589/MB/17 மூலமா 'ஊனத்தின் தன்மை 10 சதவீதம்'னு உறுதியாச்சு! 2019, ஆகஸ்ட் மாதம் மூன்றாவது சம்பவம்; இதுல, இடது கால்ல படுகாயம்!
எனக்கு உங்ககிட்டே ஒரே கேள்விதான்... என் கணவரை முதலை தாக்கின அதே ஆற்றங்கரையில இந்த ஜூன் மாதம் முதலையால காயப்பட்டவருக்கு, வனத்துறை நிவாரணம் உடனடியா கிடைக்குது; என் கணவருக்கு ஏன் இல்லை; அரசு அதிகாரி கையொப்பமிட்ட தமிழ்நாடு மீனவர் நலவாரிய உறுப்பினர் எண்: 09211000151 அடையாள அட்டையால என் கணவருக்கு எந்த பலனும் கிடையாதா?
- கொள்ளிடம் ஆற்றின் முதலைகளால் காயமுற்ற கணவர் சிவப்பிரகாசத்திற்கு நிவாரணம் கேட்கும் மனைவி ஜெயந்தி, அணைக்கரை, திருவிடைமருதுார், தஞ்சாவூர்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement