விநாயகர் சதுர்த்தி நாளில், பிள்ளையாருக்கு செய்யப்படுகிற பிரசாதங்களில் முக்கியமானது, மோதகம் எனும் கொழுக்கட்டை. தேங்காய், வெல்லப்பாகு, அரிசி மாவால் செய்யப்படும் இந்த நிவேதனப் பொருளில், ஒரு உண்மை உணர்த்தப்படுகிறது.
மேல் தோலாக இருக்கும் மாவுப் பொருள், இதுவே அண்டம். அதன் உள்ளே இருக்கும் பூரணம் தான் பிரம்மம். நமக்குள் இருக்கிற பூரணம் போன்ற நல்ல பண்புகளை மூடி மறைப்பது மாயை. இந்த மாயையை அகற்றி விட்டால், பூரணத்துவமான நல்ல பண்புகள் வெளியாகும். இதுவே, கொழுக்கட்டை உணர்த்தும் தத்துவம்.
முதன் முதலில், விநாயகருக்கு கொழுக்கட்டை செய்து படைத்து, அவரின் அருளைப் பெற்றவர், வசிஷ்ட முனிவரின் மனைவி, அருந்ததி.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!