தமிழகத்தில் முதன் முதலில் எழுப்பப்பட்ட விநாயகர் கோவில், துாத்துக்குடி மாவட்டம், ஆறுமுக மங்கலத்தில் அமைக்கப்பட்ட, ஆயிரத்தெண் விநாயகர் கோவில் என்று, வரலாறு சொல்கிறது.
கி.மு.2300 ஆண்டுகளுக்கு முன், கோமார வல்லபன் என்ற அரசன், நர்மதை நதிக்கரையிலிருந்து, 1000 வேத பண்டிதர்களை அழைத்து, யாகம் ஒன்றை நடத்த முடிவு செய்தான்.
இந்நிலையில், 999 பேர் மட்டுமே வந்திருக்க, தவித்தான், மன்னன். அப்போது, விநாயகரே வேத பண்டிதராக வடிவெடுத்து வந்து, யாகம் நடத்த உதவியதால், 'ஆயிரத்தெண் விநாயகர்' என்ற பெயர் பெற்றார்.
இந்த கோவிலில், சித்திரை மாதத்தில், 10 தினங்கள் பிரம்மோற்சவம் நடக்கிறது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!