Load Image
Advertisement

நலன், நம்பிக்கையுடன் வாழ வழிகாட்டும் புவனேஸ்வரி!

திருச்சியில், பிரிட்ஜ், கிரைண்டர், கட்டில், மெத்தை மற்றும் 'ஏசி' இல்லாத தொழில் முனைவர் வீடு, புவனேஸ்வரி உடையது.
யார் இந்த புவனேஸ்வரி?
பட்டதாரி பெண்ணான புவனேஸ்வரி, திருமணமாகி இரண்டு குழந்தைகளைப் பெற்றவர். உடல் நலத்தில் அடிக்கடி பிரச்னை ஏற்பட, பல மருத்துவ நிபுணர்களைப் பார்த்தும் பலனில்லை.
'உங்கள் உணவு முறையை மாற்றிப் பாருங்களேன்; முக்கியமாக எண்ணெயில் இருந்து ஆரம்பியுங்கள்...' என்றார், ஒருவர்.

அப்போது, சமூக வலைத்தளங்களில் மரச்செக்கு எண்ணெய் பற்றி அதிகம் தகவல்கள் வந்தபடி இருந்தன. ஆனால், லாபநோக்கோடு அதிலும் கலப்படம் செய்யப்படும் தகவலும் வந்து பயத்தை உண்டு பண்ணியது.
'மரச்செக்கில் பிழிந்து எடுக்கப்படும் நல்ல எண்ணெய்க்காக பல மரச்செக்கு ஆலைகளுக்கு சென்றேன். அதில் ஒருவர், 'என்ன தேவையோ... அதற்கான மூலப்பொருளை நீயே கொண்டு வந்து ஆட்டி எடுத்துக் கொள்; அரவைக்கூலி மட்டும் கொடு...' என்றார்.
'அதன்படி, நல்லெண்ணெய்க்கு தேவையான மூலப்பொருட்களை எடுத்து போய், என் கண் முன்பாக ஆட்டி வந்து சமையலுக்கு உபயோகித்தேன்; ஆரோக்கியத்தில் நல்ல மாற்றம் தெரிந்தது.
'என் மாற்றத்தை பார்த்த நட்புகளும், உறவுகளும் தங்களுக்கும் எண்ணெய் அரைத்து தரும்படி கேட்டனர். 'இவ்வளவு சரக்கை எங்ககிட்ட கொண்டு வந்து ஆட்டுவதற்கு பதிலாக, நீயே மரச்செக்கு ஆலை போட்டுக் கொள்...' என்றார், அவர். அதன்படி போடப்பட்டது தான், என் முதல் மரச்செக்கு ஆலை.
'என் ஆலையில் நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் உள்ளிட்ட இயற்கை எண்ணெய் அரைக்கப்பட்டது. நிறைய வாடிக்கையாளர்கள் உருவாகினர். ஒரு மரச்செக்கு எந்திரம் இரண்டாகி, இப்போது மூன்றாகியுள்ளது.
'டெங்கு, 'கொரோனா'விற்கு பிறகு, மக்களுக்கு ஆரோக்கியத்தின் மீது கூடுதல் அக்கறை வந்துள்ளது. இதன் காரணமாக, எண்ணெயுடன் சேர்த்து பாரம்பரிய அரிசி, சிறுதானிய தீனி, மூலிகை பொருட்கள், சோப்பு, கருப்பட்டி, நாட்டுச் சர்க்கரை, தேன், சத்துமாவு, கோதுமை, கம்பு அவல், கருப்பு கவுனி, பீட்ருட் மால்ட், கரிசலாங்கண்ணி ஹேர் ஆயில் என, கிட்டத்தட்ட நுாற்றுக்கும் அதிகமான பொருட்களை, 'நலமுடன்' என்ற பெயரில், நம்பிக்கையுடன் விற்பனை செய்கிறோம்.
'இதில் பல பொருட்கள், எங்கள் சொந்த தயாரிப்புகள். நாங்கள் தயாரிக்கும் மற்றும் வாங்கி விற்கும் பொருட்களின் முதல் நுகர்வோர், நானும், என் குடும்பத்தினரும் தான். எங்களுக்கு சரியாகப்பட்டால் மட்டுமே விற்பனைக்கு வரும்.
'தரையில் பாய் விரித்து படுத்து துாங்கும் பழக்கத்திற்கு வந்து, ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகிறது, இந்த ஐந்தாண்டுகளில் ஆங்கில மருத்துவரிடமோ, மருந்துகளிடமோ போனது கிடையாது.
'இந்த இயற்கை பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையின் ஒவ்வொரு அங்குலத்திலும், கணவர் ஞானவேல் முருகன் துணையிருக்கிறார்.
'எங்கள் மனநிறைவுக்காகவும், ஆரோக்கியமான சமுதாயம் அமைய வேண்டும் என்பதற்காகவும், மரச்செக்கு எண்ணெய் துவங்கி, சிறுதானிய விற்பனை வரை, இலவச பயிற்சியும் வழங்குகிறோம்...' என்கிறார்.
அவருடன் தொடர்பு கொள்வதற்கான மொபைல் எண்கள்: 7010555818,
8668188836.

- ரோஹன் ராஜ்வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement