கண் எரிச்சல், நீர் வடிதல் போன்ற பிரச்னைகளை எளிய உணவு பழக்கத்தால் சரி செய்யலாம். அது குறித்து பார்ப்போம்...
கண்கள் பிரகாசமாக இருக்க பொன்னாங்கண்ணிக் கீரை துவையலை, உணவில் சேர்த்துக் கொள்ளலாம். அருகம்புல் ஊற வைத்த நீரை உட்கொள்ளலாம். உடலில் வெப்பம் தணியும். பனை ஓலையில் பின்னிய பாயில் படுத்தால், உடல் குளிர்ச்சி அடையும்.
செம்பருத்தி பூக்களை, தயிருடன் சேர்த்து அரைத்து, தலையில் தடவி குளிக்கலாம். சிறுகீரையை வாரம் இரண்டு முறை சாப்பிடலாம். சாதம் வடித்த கஞ்சியில் சிறிது உப்பு சேர்த்து, பருகலாம். இவற்றால் கண் எரிச்சல் நீங்கி, உடல் புத்துணர்வு அடையும்.
- அ.ப.ஜெயபால்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!