தேவையான பொருட்கள்:
உதிர்த்த சோளம் - 1 கப்
வேர்க்கடலை - 1 கப்
வெல்லம், ஏலக்காய் பொடி, நெய், தண்ணீர் - தேவையான அளவு.
செய்முறை:
சுத்தம் செய்த சோளத்தை, இரண்டு மணி நேரம், நீரில் ஊற வைக்கவும். பின், வடித்து ஈரம் போக நன்றாக வறுக்கவும். ஆறிய பின், தோல் நீக்கிய வேர்க்கடலையை அதனுடன் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.
அதை, தட்டில் பரப்பி, வெல்லப்பாகு, ஏலக்காய் பொடி சேர்க்கவும். இந்த மாவு கலவையை நெய் தொட்டு, உருண்டைகளாக பிடித்தால், 'சோளம், வேர்க்கடலை உருண்டை!' தயார்.
அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடுவர். உடலுக்கு ஆரோக்கியம் தரும்.
- உஷாமுத்துராமன், மதுரை.
தொடர்புக்கு: 99655 92216
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!