என் வயது, 65; இல்லத்தரசியாக இருக்கிறேன். சிறுவர்மலர் இதழை நீண்ட காலமாக படித்து வருகிறேன். ஒவ்வொரு வாரமும் சுவாரசியமான விஷயங்களை அறிந்து மகிழ்கிறேன்.
புதிர்களுக்கு விடை தேடுவது உற்சாகம் தருகிறது. ஸ்கூல் கேம்பஸ், தொடர்கதை, அதிமேதாவி அங்குராசு, உங்கள் பக்கம், மம்மீஸ் ஹெல்த்தி கிச்சன் பகுதிகள் மிகவும் சுவாரசியம் தருகின்றன!
என் பேரக்குழந்தைகளின் படங்களும், 'குட்டி குட்டி மலர்கள்' பகுதியில் வெளியாகியுள்ளது. அதைக் கண்டு அளவில்லா ஆனந்தம் அடைந்தோம். அனைத்து வயதினரும் படிப்பதற்கு ஏற்ப விஷயங்களை தந்து அறிவூட்டுகிறது, சிறுவர்மலர். அது, என்றென்றும் பெருமையுடன் உயர்ந்து வளர வாழ்த்துகள்!
- கே.எஸ்.ஜெயந்தி, மதுரை.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!