வாழ்க்கை முறை மாற்றங்களால் மூளை நரம்பியல் பிரச்னைகள் அதிகரிப்பு!
வாழ்க்கை முறை மாற்றத்தால், மூளை நரம்பியல் பிரச்னை அதிகரித்துள்ளதாக, கூறுகிறார் நரம்பியல் நிபுணர் டாக்டர் பாலகிருஷ்ணன்.
பக்கவாதம் என்றால் என்ன? அதற்கான காரணம் என்ன?
உடலில்
ஆக்சிஜன், குளூக்கோஸ் அளவு குறையும் போது, மூளையில் உள்ள செல்கள் இறப்பது;
மூளைக்குச் செல்லும் ரத்தம் தடைபடுவது ஆகியவை, பக்கவாதம் ஏற்படக்
காரணங்கள். இறப்புக்கான காரணமான நோய்களில், இது மூன்றாவது இடத்தில் உள்ளது.
ஆறு
நொடிக்கு ஒருவர் என, ஆண்டுக்கு, 1.5 லட்சம் பேர் பாதிக்கப்படுகின்றனர்.
அதிக ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், கொழுப்புச் சத்து அதிகமாகி உடல் எடை
கூடுதல், குடிப்பழக்கம், மன அழுத்தம் பேன்றவை, இதற்கு காரணம்.
துாக்கமின்மை மூளை சார்ந்த பாதிப்பா, இதனால் என்ன பாதிப்புகள் ஏற்படும்?
ஐந்து பேரில் ஒருவருக்கு இப்பிரச்னை உள்ளது. தூக்கமின்மையால், இதய நோய், பக்கவாதம் போன்ற வியாதிகள் வரவும், வாய்ப்புகள் அதிகம்.
தூங்குவதற்கு,
நான்கு மணி நேரத்திற்கு முன், உடற்பயிற்சி செய்வதை தவிர்க்க வேண்டும்.
படுக்கை அறையில், 'டிவி' பார்ப்பதை தவிர்க்க வேண்டும். தினமும், 6 - 8 மணி
நேரம் கட்டாயம் தூங்க வேண்டும்.
சமீபகாலமாக மூளை நரம்பியல் பிரச்னைகள் அதிகரிக்க காரணங்கள் என்ன?
வாழ்க்கை
முறை மாற்றமே பிரதானமாக உள்ளது. உடல் உழைப்பு இல்லாத, இன்றைய நாகரீக
வாழ்க்கை, உணவுப்பழக்க வழக்கம், உட்கார்ந்தே பணி செய்வது ஆகியவற்றால்
சர்க்கரை, ரத்தக்கொதிப்பு உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதன் காரணமாக
மூளை நரம்புகள் பாதிக்கப்படுகின்றன. இதுதவிர, மனஉளைச்சலும் முக்கிய காரணமாக
உள்ளது.
இளம் வயதில் மூளை பிரச்னைகள் ஏற்படுவது எதனால்?
சிறிய
வயதில், அவர்களுக்கு தேவையான அனைத்தும் கிடைத்து விடுகின்றன. இதன் காரணமாக
அவர்கள் பக்குவப்படுவதில்லை. ஒரு விசயத்தில் தோல்வி அடையும் போது,
ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. இதன் காரணமாக மன உளைச்சல் அதிகரிக்கிறது. எந்த
ஒரு விசயத்தையும், எளிதாக கையாளத் தெரிவதில்லை. தோல்வியை ஏற்றுக் கொள்ளும்
பக்குவம் இல்லை. இதன் காரணமாக, பல்வேறு தீய பழக்கங்களுக்கு அடிமையாகி, நிலை
இன்னும் மோசமடைகிறது. ஒரு சில சமயங்களில், மனநல பாதிப்புகளும் ஏற்படலாம்.
மனஉளைச்சல் மூளை நரம்புகளை எப்படி பாதிக்கிறது?
மனஉளைச்சல் ஏற்படும் போது, அதற்கான 'ஸ்ட்ரஸ் ஹார்மோன்' சுரப்பு அதிகரிக்கும்.
இது உடலுக்கு நல்லதல்ல. இதன் காரணமாக ரத்தக்கொதிப்பு, சர்க்கரை, உடல் பருமன் அதிகரிக்கும்.
உடல்
உறுப்புகள் பாதிக்கப்படும். குறிப்பாக, நரம்புகள் பாதிப்பு அதிகம்
இருக்கும். மது அருந்தும் போது, மூளை நரம்புகளை அது அதிகளவில் வேலை செய்ய
வைக்கும்.
இதனால், அவை கடுமையாக பாதிக்கப்படும். இதனால், மூளையின் பல்வேறு பகுதிகளும் பாதிப்புக்கு உள்ளாகும்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!