'ஸ்கிரீனிங் மேமோகிராம்' செய்யும் போது, ஆரம்ப நிலையில் 4 மி.மீ., அளவுள்ள மிகச் சிறிய கட்டியைக் பார்க்க முடியும். இன்னும் சிலருக்கு, கேன்சராக மாற வாய்ப்புள்ள, 1 செ.மீ., அதற்கும் குறைவான அளவுள்ள செல்களைக் கூட பார்க்க முடியும். கேன்சராக மாற வாய்ப்புள்ள செல்கள், இரண்டு ஆண்டிலும் மாறலாம்; 10ஆண்டுகளும் ஆகலாம். கணிக்கவே முடியாது. கேன்சராக மாறுவதற்கு முன்பே தெரிந்தால் எளிதாக தடுக்க முடியும்.
வலிக்கு பயந்து நிறைய பெண்கள் இப்பரிசோதனை செய்ய முன் வருவதில்லை.
நிறைய இடங்களில் மனிதர்களே இயக்கக் கூடிய மேமோகிராம் கருவிகளே உள்ளன. எந்த அளவிற்கு மார்பகங்களை அழுத்த வேண்டும் என்பது பரிசோனை செய்யும் நபரின் திறமையை, பயிற்சியைப் பொருத்தது. எந்த அளவுக்கு அழுத்தம் கொடுத்தால் மார்பகம் முழுவதிலும் உள்ள செல்களை துல்லியமாகப் பார்க்க முடியும். என்பதும் பரிசோதனை செய்பவரின் கைகளில் தான் உள்ளது. அதற்கு ஏற்ற மென் பொருள் கிடையாது.
எங்கள் மையத்தில், 'ரேடியோ கிராப்' உதவியுடன் தானியங்கி இயந்திரத்தின் உதவியுடன் செய்கிறோம். குறிப்பிட்ட துாரத்தில் வந்ததும் கருவி நின்று விடும்.
அதன்பின், எந்த அளவு தேவையோ அதிக வலி இல்லாமல், கைகளால் அழுத்தம் கொடுத்தால், துல்லியமாக ஒவ்வொரு செல்லையும் பார்க்கலாம். இதற்கான பிரத்யேக மென்பொருள் உள்ளது. '3 டி' பரிசோதனை வசதியுடன் கூடிய இந்த நவீன வசதி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை உட்பட ஐந்து மையங்களில் தான் உள்ளது.
டாக்டர் கிருத்தி கேத்தரின் கபீர்,
ஆங்கோபிளாஸ்டி அறுவை சிகிச்சை நிபுணர்,
சென்னை.
044 - 4251 5151
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!