Load Image
Advertisement

கூடுவாஞ்சேரியில் ஜூன்- 10ல் முக்கனி கண்காட்சி துவக்கம்

முக்கனிகளின் கண்காட்சி குறித்து, செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி பகுதியைச் சேர்ந்த விவசாய பட்டயம் படித்த செடிகள் உற்பத்தி செய்யும் விவசாயி பி.கிருஷ்ணன் கூறியதாவது:

நம்மூர் கோடை வெயில் மற்றும் மழைக்கு ஏற்றவாறு, குளிர் மற்றும் வறட்சியான பிரதேசங்களில் விளையும், பல வித பழ மரங்களை சாகுபடி செய்யலாம்.

அந்த வரிசையில், மா, பலா, வாழை ஆகிய முக்கனியும் சாகுபடி செய்யலாம்.

இது, மாடி தோட்டம் மற்றும் விளை நிலங்களில், சாகுபடி செய்யலாம். இந்த பழங்களின் மூலமாக கணிசமான வருவாய் கிடைக்கும்.

குறிப்பாக, எங்கள் தோட்டத்தில் விளைந்த மா, பலா, வாழை ஆகிய பழங்கள் மற்றும் பிற வாடிக்கையாளர்கள் மூலமாக விளைவித்த மா, பலா, வாழை பழங்களை, ஜூன்- 10, ஜூன்- 11 ஆகிய இரு தினங்கள், காலை 9:00 மணி முதல், மாலை 6:00 மணி வரை, 50 வகையான முக்கனிகளின் கண்காட்சி நடைபெற உள்ளன.

செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி, கிரீன் லேன்ட் நர்சரியில் நடைபெறும் கண்காட்சியில், முன்னோடி விவசாயிகள் மற்றும் மாடி தோட்டம் பராமரிப்பாளர்கள் இலவசமாக பங்கேற்கலாம்.

இதன் வாயிலாக, நம்மூர் மண்ணிலும் புதுமையான மா, பலா, வாழை ஆகிய ரகங்களை சாகுபடி செய்து பயன் பெறலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புக்கு: பி.கிருஷ்ணன்,
98419 86400.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement