உணவு, வாழ்க்கை முறை மாற்றத்தால், கழிவுகள் வெளியேறுவதில் ஏற்படும் சிக்கலில் சிறுநீரகக் கல் பிரச்னை பிரதானமாக உள்ளது. சிறுநீரகங்கள், சிறுநீர் பாதையில் அளவுக்கு அதிகமான யூரிக் அமிலம், கால்சியம் போன்ற தாது உப்புகள் தேங்குவதால் சிறுநீரகக் கற்கள் உருவாகின்றன. 'சிட்ரேட்' குறைவாக இருந்தாலும் கல் உருவாகலாம்.
மரபியல் காரணிகள், உணவுப் பழக்கம், தண்ணீர் குறைவாக குடிப்பது ஆகியவற்றாலும் கல் உருவாகலாம். கற்கள் பொதுவாக கால்சியம் வகையை சேர்ந்தவையாக இருந்தாலும், யூரிக் அமிலம், சல்பேட், மும்மை கற்கள், சிஸ்டீன் கற்கள் என்று பல வகைகள் உள்ளன. பெரும்பாலான சமயங்களில் எந்த அறிகுறியும் இருக்காது. 'ஸ்கேன்' எடுக்கும் போது தான் தெரியவரும். சிலருக்கு சிறுநீர் கழிக்கும் போது, கல் வெளியேறி, பின்பக்க வயிற்றிலிருந்து வலி பரவும்.
சிலருக்கு சிறுநீரில் ரத்தம் வெளியேறலாம். சிறுநீரகக் கல் வராமல் தடுக்க, நாள் ஒன்றுக்கு 5 கிராமுக்கு மேல் உப்பு சேர்த்து கொள்ளக்கூடாது. தினமும் 3 -- 4 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். புரதச் சத்துக்காக பயறு வகைகள், பருப்பு உள்ளிட்ட சைவ உணவுகளை சாப்பிடலாம். சாக்லேட், கீரை, முந்திரி, பாதாம், பிஸ்தா, முட்டை, மீன், இறால், நண்டு இவற்றை தவிர்ப்பது நல்லது.
டாக்டர் எல்.கண்ணன்,ஹோமியோபதி மருத்துவர்,
சென்னை
94443 01226
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!