ஆசிய கண்டத்திலேயே, இன்னமும் குகையில் வாழும் பழங்குடி இன மக்கள் இருக்கின்றனர்.
கேரள மாநிலம், நிலம்பூர் அடர்ந்த வன பகுதியில் நடுவில் உள்ள குகைகளில் வசித்து வருகின்றனர்.
வெளி உலகத்துடன் அதிக தொடர்பு இல்லாததால், ஊருக்குள் இவர்கள் வருவதில்லை.
இவர்களில் பசியால் வாடிய சிறுவன் ஒருவன், மதிய உணவுக்காக, பள்ளிக்கூடம் அருகே சுற்றித் திரிந்துள்ளான். அவனிடம் விசாரித்துள்ளார், பள்ளி ஆசிரியை ஒருவர்.
சாப்பாட்டுக்காக இங்கு வந்ததாக கூறினான். பெயர் கூட சூட்டப்படாத அந்த சிறுவனுக்கு, வினோத் என்று பெயர் வைத்து, பள்ளியில் சேர்த்து படிக்க வைத்துள்ளனர், அந்த ஆசிரியை மற்றும் வேறு சில ஆசிரியர்கள்.
தன் சொந்த செலவில், ஐ.ஏ.எஸ்., படிக்க அவனை, டில்லிக்கு அனுப்ப விரும்பியுள்ளார், பள்ளி ஆசிரியர் ஒருவர். அவ்வளவு துாரம் தனியாக போக பயமாக உள்ளதாக கூறவே, கல்லுாரியில் சேர்த்து படிக்க வைத்துள்ளார்.
இன்று, எம்.பில்., பட்டம் பெற்று, பல்கலை கழகம் ஒன்றில் பணியாற்றுகிறார், வினோத்.
தான் பெற்ற கல்வியை, தன் இன மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று, தீவிர முயற்சி எடுத்து வருகிறார். கல்வியால் மட்டுமே தங்கள் இனத்துக்கு விடிவுகாலம் கிடைக்கும் என்று நம்புவதாகவும் கூறுகிறார், வினோத்.
ஜோல்னாபையன்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!