மகிழ்ச்சியை
எப்படிப் பெருக்குவது
அல்லது கவலையை
எப்படிக் கழிப்பது என்று
கணிதம் நமக்கு
கற்றுத் தராமல் இருக்கலாம்
ஆனால், அது
மிக முக்கியமான ஒன்றை
நமக்கு சொல்லித் தருகிறது...
ஒவ்வொரு பிரச்னைக்கும்
ஒரு முடிவு இருக்கிறது
என்பது தான் அது!
ஆயிரம் தவறுகள்
செய்த பிறகும் கூட
நம் மீது நாம்
அன்பு செலுத்துகிறோம்
நம்மை அளவற்று நேசிக்கிறோம்
அவ்வாறிருக்க
ஒரே ஒரு தவறு செய்ததற்காக
மற்றவர்களை நாம்
எப்படி வெறுக்க முடியும்
நம் வாழ்க்கையின்
மிகப்பெரிய பரிசு
மன்னிப்பது என்று உணருங்கள்!
கல்லால் அடிபட்டு
காயம்பட்ட பின்னும்
ஒரு மரம் தரும்
சுவையான கனியைப் போல
அந்த மன்னிப்பு என்பது
பெருந்தன்மையோடு இருக்கட்டும்!
அதிர்ஷ்டசாலிகளுக்குஅருமையான சந்தர்ப்பங்கள்
வாய்க்கின்றன
தைரியமானவர்கள்
சந்தர்ப்பத்தை உருவாக்குகின்றனர்
ஆனால், பிரச்னைகளை
சோதனைகளை எல்லாம்
யார் சரியான சந்தர்ப்பமாக
வாய்ப்பாக மாற்றுகின்றனரோ
அவர்களே மிகச்சிறந்த
வெற்றியாளர்களாக மாறுகின்றனர்!
நம்மைச் சுற்றியிருக்கிற
மனிதர்கள் எல்லாருக்குமே
மரியாதை கொடுங்கள்
சிலர் அதற்கு
தகுதி உடையவர்களாக
இல்லை என்றாலும்
மரியாதை என்பது
அவர்களுடைய குணத்தை
காட்டுவதல்ல
நம்முடைய நல்ல குணங்களின்
பிரதிபலிப்பு என்பதை
நினைவில் வைத்திடுங்கள்!
— எஸ்.வி. ராஜசேகரன், மதுரை.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!