தேவையான பொருட்கள்:
பீட்ரூட் - 2
சாதம் - 100 கிராம்
மிளகு, சீரகம், கறிவேப்பிலை - சிறிதளவு
காய்ந்த மிளகாய், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
பீட்ரூட் கிழங்கை சுத்தம் செய்து தோல் சீவி துண்டுகளாக்கவும். அதனுடன் சீரகம், மிளகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து அரைத்து விழுதாக்கவும். பின், சாதத்தை சேர்த்து அரைக்கவும். பழைய சாதமும் பயன்படுத்தலாம்.
இந்த மாவு கலவையை, துணியில் பிழிந்து வெயிலில் உலர்த்தவும். பின், கொதிக்கும் எண்ணெயில் பொரித்து எடுக்கவும். சுவையான, 'பீட்ரூட் வடகம்' தயார். பக்க உணவாக பயன்படுத்தலாம். அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடுவர்.
- எஸ்.லோகநாயகி, ஈரோடு.
தொடர்புக்கு: 97900 72384
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!