கோபம் ஏற்பட்டால், மூளையில் அதிர்வுகள் அடங்க சராசரியாக, 20 நிமிடம் தேவைப்படும். அப்போது எந்த முடிவும் எடுக்க கூடாது. தனிமையில் அமர்ந்து நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். அப்போது அமைதி கிடைக்கும்.
கோபம் ஏற்பட்டால் உடலில் ரசாயன மாற்றங்கள் நடக்கும். மூளையில் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தும், 'அமிக்டலா' கட்டளைப்படி, 'கேட்ட காலமைன்' என்னும் ரசாயனம் சுரக்கத் துவங்கும்.
இது, மூச்சின் வேகத்தை அதிகரிக்கும். இதயத்தை வேகமாக துடிக்க வைக்கும். உடலில் எல்லா பாகங்களுக்கும் ஆக்சிஜனை வழக்கத்தை விட, அதிகமாகவும், அதிவேகமாகவும் வழங்கும். இதனால், சிறிது நேரத்திற்கு அதிக ஆற்றல் கிடைக்கும். அட்ரினலின், நார் அட்ரினலின் என்ற ஹார்மோன்கள், கோபத்தின் போது சுரந்து சண்டைக்கு தயார் படுத்தும்.
கோப உணர்வை தணிக்க, அன்றாடம் மூச்சு பயிற்சி செய்ய வேண்டும்.
- பி.சி.ரகு
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!