மனித உடல் இயக்கம் மிகவும் சிக்கலானது. மருத்துவர்கள் அதை மிக எளிமையாக புரிந்து கொள்கின்றனர். உடலின் செயல்பாடுகளை அறிந்தால் வியப்பு ஏற்படும். அது பற்றி சில விபரங்களை அறிவோம்...
மனித உடல் வளர்ச்சி, 21ம் வயதில் குறைந்து விடுகிறது. வாழ்வின் இறுதி வரை வளர்வது காது மட்டுமே; ஆயிரம் ஆண்டுகள் ஒருவர் உயிர் வாழ நேர்ந்தால் ஒரு குட்டி யானைக்கு உள்ள அளவில் காது வளர்ந்து இருக்கும்.
* சராசரி மனிதனின் உடலில் இருக்கும் ரோமங்களின் எண்ணிக்கை,5 லட்சம். உடலில் ரோமங்கள் இல்லாத பகுதி, உள்ளங்கை மற்றும் உள்ளங்கால்கள் மட்டுமே
* பகல் வேளையில் விழித்திருந்தாலும், ஆயிரக்கணக்கான முறை கண்ணை சிமிட்டியாக வேண்டும். இதை ஆய்வு செய்தால், இரவைத் தவிர, பகலிலும் பாதி நேரம் கண்ணை மூடி தான் இருக்கிறோம்
* உடலில் மிகவும் வலிமையானது, பல்லின் மீது இருக்கும் எனாமல் தான். இது, யானை தந்தத்தை விட வலுவானது என கண்டறியப்பட்டுள்ளது
* பல்வேறு வேலைகளை சிரமமின்றி செய்யும் ஒரே ஆயுதம் கை. தட்டில் இருக்கும் உணவை கரண்டியில் எடுக்கும் போது, உடலில், 30 இணைப்புகள், 50 தசைகள் இயங்க ஆரம்பிக்கும்
* நுரையீரலில் கோடிக்கணக்கான ரத்த நாளங்கள் உள்ளன. இவற்றை கோர்த்தால், அதன் நீளம், 2,400 கி.மீ., இருக்கும்
* மனிதன் துாங்கும் போது உடல் உயரம், 8 மி.மீ., அதிகரிக்கும். துாங்கி எழுந்த பின், மீண்டும் பழைய உயரமே இருக்கும். உட்காரும் போதும், நிற்கும் போது புவி ஈர்ப்பு விசையால் எலும்புகளில் ஏற்படும் அழுத்தமே இதற்கு காரணம்
* சிறுநீரகம் பல லட்சம் வடிகட்டியை உடையது. அவை நிமிடத்திற்கு, 13 லிட்டர் ரத்தத்தை வடிகட்டுகிறது
* கண் தசை, ஒருநாளில், 1 லட்சம் முறை அசைகிறது.
* ரத்த அணு முழு உடலையும் சுற்றி வர, 60 வினாடிகள் எடுத்துக் கொள்ளும்
* மனித உடலின் மிகப்பெரிய செல், பெண்ணின் கருமுட்டை; மிகச்சிறிய செல் ஆணின் விந்து அணு
* ஒரு அடி எடுத்து வைக்க, 200 தசைகள் இயங்க வேண்டும்
* கால் பெருவிரல், இரண்டு எலும்புகளை உடையது. மற்ற விரல்கள் ஒவ்வொன்றும் மூன்று எலும்புகளை உடையது
* மனிதனின் கால் பாதங்களில், 2 லட்சத்து 50ஆயிரம் வியர்வை சுரப்பிகள் உள்ளன
* மனித வயிற்றில் உள்ள செரிமான அமிலம், துத்தநாகத்தை கரைக்கும் சக்தி உடையது
* மனித மூளையில், பிரிட்டானிகா தகவல் களஞ்சியத்தை போல், ஐந்து மடங்கு தகவல்களை சேமிக்க முடியும்
* கால் நகங்களை விட, கைவிரல் நகங்கள் வேகமாக வளர்கின்றன
* ஒரு மனிதனுக்கு தினமும், 40 முதல், 100 தலைமுடிகள் உதிர்கின்றன
* நாக்கின் சுவை மொட்டுகளில் பெரும்பகுதி, 60 வயதாகும் போது அழிந்து விடுவதாக கண்டறிந்துள்ளனர்.
வியப்பு ஏற்படுத்தும் நம் உடல் செயல்பாட்டை அறிந்து, சிறப்பாக பராமரித்தால் நீண்ட நாட்கள் நலமுடன் வாழலாம். உலகில் நன்மைகள் பல செய்யலாம்.
- என்றென்றும் அன்புடன், அங்குராசு.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!