குறைந்த அளவு கலோரி உடையது வெள்ளரி. உடலுக்கு குளிர்ச்சி தரும்; அறுவடை செய்தவுடன் அப்படியே உண்ணலாம். தனித்த சுவையுடையது. செரிமானத் திறனை அதிகரிக்கும்.
வெள்ளரியில் உள்ள நீர்சத்து, நாக்கு வறட்சியை போக்கும்; பசியை உண்டாக்கும். சிறுநீரை துாண்டும். இரைப்பையில் ஏற்படும் புண்ணை குணப்படுத்தும். பித்தப்பை, சிறுநீரகம் சம்பந்தப்பட்ட கோளாறை தடுக்கும். இந்த காயில், 96 சதவீதம் ஈரப்பதம் உள்ளது. இதனால், இளநீர் போன்று உடலுக்கு நன்மை தரும்.
வறண்ட தோல் உடையோர், தினமும் வெள்ளரிக்காய் சாறு அருந்தி நிவாரணம் பெறலாம். நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். தினமும் சாப்பிட்டால், மலச்சிக்கல் ஏற்படுவதை தடுத்து, குடலை சுத்தமாக்கும்.
வெள்ளரியில் சோடியம், கால்ஷியம், மக்னீஷியம், இரும்பு, பாஸ்பரஸ், கந்தகம், சிலிகான் மற்றும் குளோரின் போன்ற நுண் சத்துக்கள் உள்ளன. ரத்தத்தில், சிவப்பணுக்களை உற்பத்தி செய்யும் பொட்டாஷியமும் அதிகம். இது, ஈரல், கல்லீரல் சூட்டை தணிப்பதால், நோய்கள் அண்டாது.
- ஏ.எஸ்.கோவிந்தராஜன்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!