என் வயது, 76; கோவை, தொண்டாமுத்துார் ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளியில், இடைநிலை உதவி ஆசிரியையாக, 40 ஆண்டுகள் சிறப்பாக பணிபுரிந்தேன். மனநிறைவுடன் ஓய்வு பெற்றேன். சிறுவர்மலர் இதழை தொடர்ந்து படித்து வருகிறேன்.
இதில், வானவியல், அறிவியல், வினோத தாவரங்கள், விலங்குகள், பறவைகள் குறித்த அரிய செய்திகள் வியப்பு ஏற்படுத்துகிறது.
இவற்றை அவ்வப்போது தொகுத்து ஆல்பமாக்கி, மாணவ, மாணவியர் பயன்படுத்தும் வகையில் கொடுக்கிறேன். படித்து பயன்பெறுகின்றனர். சிறுவர்மலர் இதழ் அறிவூட்டுவதுடன், மகிழ்ச்சியும் தருகிறது.
- பி.சரஸ்வதி சிவராஜ், கோவை.
தொடர்புக்கு: 99763 80555
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!