குஜராத் மாநிலத்தில், 'நாயர் டயர்' என்றால் பிரபலம். நாயருக்கும், டயருக்கும் என்ன தொடர்பு என்கிறீர்களா!
குஜராத்தில், டயர் கடைகள் வைத்திருக்கின்றனர், ஏராளமான மலையாளிகள். இதில் வேடிக்கை என்னவென்றால், மலையாளிகள் எந்த பிரிவாக இருந்தாலும், அவர்களை நாயர் என்று தான் இங்கு அழைக்கின்றனர்.
மன்னர் ஆட்சியின்போது, பரோடா மன்னன் பிரதாப் ராவ் சிங் கெய்க்வாட் என்பவருக்கு, தங்கத் தேர் செய்ய வேண்டும் என, ஆசை.
அப்போது, மதராஸ் ராஜ குடும்பத்திற்காக, தேர் தயாரிக்கும் வேலைகளை செய்து வந்தனர், மலையாளிகள். இவர்கள், பரோடா மன்னனுக்கு தேர் செய்ய அனுப்பப்பட்டனர்.
அவர்களின் வாரிசுகள் தான் இன்று, டயர் விற்பனையில் ஈடுபட்டுள்ளனர்.
இங்குள்ள டயர் கடைகளில் பெரும்பாலானவை, மலையாளிகளுக்கு சொந்தமானவை.
ஜோல்னாபையன்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!