கடந்த, 1370 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட, இஸ்லாமிய வழிபாட்டு தலம் ஒன்று, அக்காலத்தில் கட்டப்பட்ட முறையிலேயே இன்றும் பராமரிக்கப்படுகிறது. அதன் கதவுகள், ஜன்னல்கள், படிக்கட்டுகள், கிணறு ஆகியவை பழமை தோற்றத்திலேயே காட்சி அளிக்கிறது. இன்று அதி நவீன வசதிகள் வந்தபோதும் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.
கிணற்றிலிருந்து தண்ணீர் எடுக்க பாக்கெட் கூட இல்லை. டப்பா ஒன்றில் கயிறு கட்டி தண்ணீர் இறைக்கின்றனர். அரபு நாடுகளுள் ஒன்றான, சவுதியில் பானிமாசின் பகுதியில் இருக்கிறது, இந்த பழமையான வழிபாட்டுத் தலம். இங்கு பக்தர்கள் மட்டுமின்றி, சுற்றுலா பயணிகளும் வருகின்றனர்.
— ஜோல்னாபையன்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!