தென் கிழக்கு ஆசிய நாடான, மலேஷியாவைச் சேர்ந்த, பர்கானா என்ற பெண், தன், ஐந்து வயது மகள் பாத்திமா, பள்ளிக்கு செல்வதை ஊக்கப்படுத்துவதற்காக, 2 கோடி ரூபாய் மதிப்புள்ள, 'ஜி வேகன்' என்ற, காரை பரிசாக அளித்துள்ளார்.
இந்த குழந்தை பள்ளிக்கு செல்லாமல் பிடிவாதம் பிடித்து அழுதது. பிறந்த நாளன்று, தன் மகளுக்கு, இந்த ஆடம்பர பரிசை கொடுத்து, ஆச்சரியப்படுத்தி உள்ளார், பர்கானா. இப்போது, அந்த குழந்தை சமர்த்துக் குட்டியாக, அந்த காரில் பள்ளி செல்கிறது.
'ஆடம்பரம், அன்பு எல்லாம் இருக்க வேண்டியது தான்; ஆனால், அதற்கும் ஒரு அளவு உண்டல்லவா...' என, இந்த தம்பதியை பலரும் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
ஜோல்னாபையன்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!