காட்டுச்செண்பக பூ சாகுபடி குறித்து, செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி பகுதியைச் சேர்ந்த விவசாய பட்டயம் படித்த விவசாயி பி.கிருஷ்ணன் கூறியதாவது:
நம்மூர் கோடை வெயில் மற்றும் மழைக்கு ஏற்றவாறு, குளிர் மற்றும் வறட்சியான பிரதேசங்களில் விளையும், பல வித பழங்கள் மற்றும் பூச்செடிகளை செய்துள்ளேன்.
அந்த வரிசையில், மாடி தோட்டத்தில் அமைக்கும் காட்டுச்செண்பக பூ சாகுபடி செய்யலாம். இது, மனோரஞ்சித பூக்களை காட்டிலும், அதிக நறுமணம் மற்றும் மருத்துவ குணம் நிறைந்தது.
குறிப்பாக, மாடி தோட்டத்தில் சாகுபடி செய்யும் போது, அந்த பூக்களின் நறுமணம் சகலவித நோய்களை விரட்டும் தன்மை உடையது. சந்தைபடுத்தும் திறன் இருக்கும் விவசாயிகள், இந்த பூச்செடிகளை நிலத்திலும் சாகுபடி செய்து, வருவாய் ஈட்டலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு: பி.கிருஷ்ணன்,
98419 86400.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!