ஐந்து புலன்களில் பார்வையைத் தரும் கண்களுக்கு, ஐந்து வகை பித்தங்களில் ஒன்றான 'அலோசக பித்தம்' நிறங்களைப் பகுத்தறியும் திறனை கண்களுக்கு அளித்து, நரம்பு மண்டலத்துடன் இணைந்து, பார்வையை மேம்படுத்துகிறது. கடுமையான வெப்பத்தால் ஏற்படும் பாதிப்பு, இயல்பிலேயே மென்மையாக உள்ள கண்களை எளிதில் பாதிக்கின்றன. வெப்ப பாதிப்பை சரியான முறையில் நிர்வகிக்கும் போது, அலோசக பித்தம் சீராகிறது. பாதிப்பில் இருந்து கண்கள் பாதுகாக்கப்படுகின்றன.
செய்ய வேண்டியது
ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது தெளிவான நீரால் கண்களைக் கழுவ வேண்டும். சூரிய ஒளி கதிர்வீச்சின் பிரகாசமான வெளிச்சத்தை நேரடியாக பார்ப்பதை தவிர்த்தல், உள்ளங்கைகளால் குறிப்பிட்ட நேரத்திற்கு ஒரு முறை சில வினாடிகள் கண்களை மூடுவதால், கண்களுக்கு ஓய்வு கிடைக்கும்.
தவிர்க்க வேண்டியவை
உஷ்ணம் அதிகமாக இருக்கும் நேரங்களில் வெளியில் சென்று திரும்பியதும் குளிப்பது, உடற்பயிற்சி செய்வது கூடாது. உடற்பயிற்சி செய்து முடித்ததும், குளிர்ந்த நீர் குடிப்பது, ஊறுகாய் உட்பட எண்ணெய், அதிக காரமான உணவுகளை சாப்பிடுவது, இரவில் அதிக நேரம் கண் விழித்திருந்து, 'மொபைல், லேப்டாப், கம்ப்யூட்டர்' பார்ப்பது, மன அழுத்தம் இவற்றை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
இரவில் துாங்குவதற்கு முன், ரோஸ் வாட்டர், சந்தனம் இவற்றில் தயாரான தரமான, சுத்தமான திரவங்களை சில சொட்டுகள் கண்களில் விடுவது, கண்களுக்கு குளிர்ச்சி தருவதோடு, அழற்சி, தொற்றிலிருந்து பாதுகாக்கும். வேக வைத்த கோதுமை, செரிமான சக்தி நன்றாக இருந்தால் சாதத்தில் நெய் சேர்த்து சாப்பிடுவது நல்லது.
டாக்டர் ஹரி கிருஷ்ணன்,
ஆயுர்வேத மருத்துவர்,
சென்னை
89399 33150
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!