வயிற்றைச் சுற்றி கொழுப்பு திசுக்கள் சேர்ந்தால், அது இன்சுலின் ஹார்மோனுக்கு எதிராக செயல்படும். அதாவது ரத்த குளுக்கோஸ் அளவு அதிகரிக்கும். அதை திசுக்களுக்கு எடுத்துச் செல்லும் பணியை இன்சுலின் ஹார்மோன் செய்யாது. எனவே, திசுக்களுக்குள் தேவையான அளவு குளுக்கோஸ் கிடைக்காது.
கை, கால் அசைப்பது, சுவாசிப்பது, வேலை செய்வது, நடப்பது, குறிப்பாக மூளை வேலை செய்ய வேண்டும் என்றால் குளுக்கோஸ் அவசியம்.
தொடர்ந்து 10 நிமிடங்கள் மூளைக்கு குளுக்கோஸ் செல்லாவிட்டால் செயலிழந்து விடும். அரை மணி நேரத்திற்கு மேல் மூளைக்கு குளுக்கோஸ் செல்லாவிட்டால், நிரந்தர நினைவிழப்புக்கு சென்று விடுவோம். இந்த நிலையில், திசுக்களுக்கு குளுக்கோஸ் இல்லை என்ற தகவல் மூளைக்கு சென்றதும், உணவு போதவில்லை என்று தவறாக புரிந்து கொள்ளும் மூளை, பசியைத் துாண்டும். இதனால் அடிக்கடி சாப்பிடத் தோன்றும்.
தேவைக்கு அதிகமாக சாப்பிடுவதால், ரத்தத்தின் அடர்த்தி அதிகமாகி, தாகம் அதிகம் எடுக்கும்; நாக்கு வறண்டு விடும். நிறைய தண்ணீர் குடிப்பதால், அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டி வரும். திசுக்களுக்கு இன்சுலின் போகாததால் உடல் சோர்வு, தளர்ச்சி போன்ற அறிகுறிகள் இருக்கும். தசைகளுக்கு வேலை தரும் போது, இயல்பாகவே குளுக்கோஸ் அளவு குறைந்து, திசுக்கள் கிரகிக்கும் தன்மை பெறும்.
'ஜிம்'மிற்கு சென்று உடலின் குறிப்பிட்ட உடல் பாகத்திற்கு மட்டும் செய்யும் ஐசோமெட்ரிக் உடற்பயிற்சி, இதயத்திற்கு அதிக சிரமத்தை தரும். ஏரோபிக்ஸ் உடற்பயிற்சி செய்வது தான் நல்லது. இதில், ஒரே சமயத்தில் உடல் முழுதும் சீராக வேலை செய்யும். இதிலும் சிறந்த பயிற்சி நடனம். இன்சுலின் எதிர்ப்பாற்றல் என்பது ரத்தக் குழாயின் வளர்ச்சியை துாண்டி, கொழுப்பு படிந்து, ரத்த அழுத்தம் அதிகமாகும். இதை கட்டுப்படுத்தாவிட்டால் இதயக் கோளாறு வந்து விடும்.
கொழுப்பு அதிகமாக இருந்தால் கொழுப்பு அமிலமாக மாறி, இதய தசைகள், கல்லீரல், தொடையில் உள்ள தசைகளில் சேர்ந்து விடும். இதற்கு பிரதான காரணம் இன்சுலின் எதிர்ப்பு.
இது, ரத்தக் குழாயின் வளர்ச்சியைத் துாண்டி, தடிமனாக்கும். ரத்த நாளத்தில் கொழுப்பு படிந்து, இயல்பாக இருந்த ரத்த அழுத்தம் அதிகமாகும். ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்காவிட்டால், இதயக் கோளாறுகள் வந்து விடும்.
டாக்டர் என்.தமிழ்செல்வம்,
பொது மருத்துவம் மற்றும் மூட்டு தசை இணைப்பு திசு நோயியல் நிபுணர்,
சென்னை
97894 81143
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!