Load Image
Advertisement

முதல்வர் பேசுகிறேன்!

வாழ்க்கை முறை, உடல்மொழி, எண் ணங்கள், இலக்குகளை எல்லாம் யாரோ ஒருத்தர்கிட்டே இருந்து நக லெடுத்துக்கிற இன்றைய தலை முறை மாணவர்களை தனித்துவமா னவர்களா உருவாக்க விரும்புற நான்... ஆண்டாள் ராகவன்; எம்.எம். டி.ஏ., 2 - சென்னை உயர்நிலைப் பள்ளியோட தலைமை ஆசிரியை!


கடவுளின் கருவி

'உங்க பெண்ணோட திறமைக்கு ஆசிரியர் பயிற்சியில சேர்த்து விடலாமே'ன்னு என் அம்மாகிட்டே சொன்ன ஆசிரியர் மூலமா, 'வழிகாட்ட கடவுள் நேரடியா வர மாட்டார்'ங்கிற உண்மையை உணர்ந்தேன். 'கடவுளோட கருவியா நாமளும் இருக்கணும்'னு என் மாணவர்களை வழிநடத்துறேன்!


சுய விமர்சனம்

'சரி தவறை பகுத்துணர முடியாத தருணங்கள்ல நேர்மையானவர்களோட உதவியை தயங்காம கேட்கணும். அன்றாட நடவடிக்கைகளை ஒவ்வொரு இரவிலும் சுய விமர்சனத்துக்கு உட்படுத்தணும். சுய விமர்சனம் இல்லாம கண்ணியமான வாழ்க்கைக்கு வாய்ப்பில்லை'ங்கிறது மாணவர்களுக்கு எப்போதும் நான் சொல்லிட்டே இருக்கிற அறிவுரை!


ஆசிரியர்களே...

எது நாயகத்தன்மையா கொண்டாடப்படுதோ அதை வழிகாட்டலா மாணவர்கள் எடுத்துக்கிறதுல எனக்கு பெரும் வருத்தம் உண்டு. இந்த இடத்துல, 'நீ அணுகுற கோணம் தப்புப்பா'ன்னு புரிய வைக்கணும்; இதுக்கு, சமூகம் பற்றிய புரிதல் ஆசிரியர்களுக்கு இருக்கணும். வாசிப்பும் கலந்துரையாடல்களுமே இத்தெளிவு தரும்!


களம் தந்த மாற்றம்

'கணவர் இல்லை; பையனும் மதிக்க மாட்டேங்கிறான்'னு வருந்தின அம்மாகிட்டே, 'நீங்க வீட்டு வேலை செய்ற இடத்துக்கு அவனை கூட்டிட்டுப் போங்க'ன்னு சொன்னேன். சமீபத்துல சந்திச்சப்போ, 'ரொம்ப நன்றி டீச்சர்'னு அவங்க சொன்னாங்க; அந்த நன்றியில அவ்வளவு அர்த்தம்!


என் பாதை

நான் வேலை பார்த்த முந்தைய பள்ளி விடுதியில தங்கி படிச்சிட்டிருந்த அண்ணன், தம்பியை விடுதி இடிப்புக்கு அப்புறம் என் வீட்டுல தங்க வைச்சு நான் படிக்க வைச்சேன். இதை நான் சொல்றதால, செஞ்ச உதவிக்கு வெளிச்சம் போடுறதா நினைக்க வேண்டாம்; என்னை மாதிரி எல்லாரும் கல்விக்கு உதவணும்ங்கிற ஆசை; அவ்வளவுதான்!


உங்களின் பங்கு

பள்ளிப்படிப்பு முடிஞ்சதும் சம்பாதிக்க கிளம்புறதும், கல்லுாரி படிப்பை நிறைவு செய்யாம விடுறதும் அரசுப்பள்ளி மாணவர்கள்கிட்டே வழக்கமா இருக்க காரணம், வறுமை! 'உங்க பிரச்னைகளுக்கு கல்வி மட்டும் தான் தீர்வு'ன்னு நாங்க தொடர்ந்து சொன்னாலும், குடும்பத்தினர் ஒத்துழைப்பு இல்லாம இப்பிரச்னைக்கு தீர்வு கிடையாது!


பெரும் பயம்

'என் கருத்தை சொல்லக்கூட பெற்றோர் வாய்ப்பு தர மாட்டேங்குறாங்க; இனி யாரையும் கண்டிக்க மாட்டேன்; எனக்கு எதுக்கு பெத்தவங்க சாபம்னு ஆசிரியர்கள் வருந்துற இன்றைய சூழல் மாணவர்கள் எதிர்காலத்துக்கு நல்லதில்லையே'ன்னு பயப்படுறேன்.வாசகர் கருத்து (1)

  • N Annamalai - PUDUKKOTTAI,இந்தியா

    உண்மை

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement