'ஹூண்டாய் மோட்டார்' நிறுவனம், அதன் 'ஐ - 20' ஹேட்ச்பேக் காரை புதுப்பித்து, உலகளவில் மீண்டும் அறிமுகம் செய்துள்ளது. முதற்கட்டமாக ஐரோப்பிய சந்தையில் விற்பனைக்கு வரும் இந்த கார், இந்த ஆண்டு இறுதிக்குள் இந்திய சந்தையில் களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது சந்தையில் இயங்கி வரும் மூன்றாம் தலைமுறை ஐ - 20 காரை ஒப்பிடும் போது, இந்த காரில் பெரிய டிசைன் மாற்றங்கள் எதுவும் இல்லை என்றாலும், வாடிக்கையாளர்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முக்கியமாக, சில வகை புதிய ஐ - 20 கார்களில் மட்டும் 'அடாஸ்' பாதுகாப்பு அமைப்பு அத்தியாவசியப் படுத்தப்பட்டுள்ளது.
அதாவது, டிசைன் மாற்றம் செய்யப்பட்ட முன்புற மற்றும் பின்புற பம்பர்களில், 16 அங்குல அல்லது 17 அங்குல அலாய் சக்கரங்கள், 10.25 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. இதன் பாதுகாப்பை பொறுத்தவரையில், லேன் அசிஸ்ட், விபத்து களை தவிர்க்க எச்சரிக்கை ஆகிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்தியாவில், 1 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.2 லிட்டர் பெட்ரோல் ஆகிய இரு இன்ஜின் வகையில் இந்த கார் வருகிறது. இதில் ஏதேனும் மற்றம் இருக்கிறதா என்பது குறித்த எந்த தகவலும் தற்போது இல்லை.
இந்திய சந்தையில் இயங்கி வரும், 'மாருதி சுசூகி பலெனோ, டாடா ஆல்ட்ரோஸ் மற்றும் டொயோட்டா கிளான்ஸா' ஆகிய கார்களுடன் போட்டியிட்டு வருகிறது இந்த ஐ - 20 கார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!