'பி.எம்.டபுள்யு., மோட்டோராட்' நிறுவனம், அதன் 'ஆர் - 18 ரோக்டேன் பேகர்' என்ற புதிய க்ரூசர் பைக்கை உலக சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த பைக், சாலையில் அதன் ஆதிக்கத்தை நிலைநாட்டும் அளவிற்கு மிக கம்பீரமாகவும், ஆக்ரோஷமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சிங்கிள் சீட்டர் பைக்கான இதன் பின்புறத்தில், 27 லிட்டர் சேமிப்பு பெட்டி வழங்கப்பட்டுள்ளது.
இதன் இன்ஜினைப் பொறுத்த வரையில், ஏற்கனவே சந்தையில் இருக்கும் 'ஆர் - 18' க்ரூசர் பைக்கின் அதே 1,802 சி.சி., டுவின் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின், கிட்டத்தட்ட 91 பி.எஸ்., ஹார்ஸ் பவரையும், ஆச்சரியமூட்டும் 158 என்.எம்., டார்க்கையும் வெளிப்படுத்துகிறது.
இந்த பைக், இந்திய சந்தையில் மிக விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!