'போர்ஷ்' கார் நிறுவனம், அதன் புதிய '718 ஸ்பைடர் ஆர்.எஸ்.,' என்ற புதிய ஸ்போர்ட்ஸ் காரை உலக சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
போர்ஷ், 1995ல் வெளியிட்ட 'பாக்ஸ்டர்' கார் வடிவில் இருக்கும் இந்த காரில் மிரள வைக்கும் 4 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட காதை கிழிக்கும் சத்தத்துடன், 100 கி.மீ., வேகத்தை அசாத்தியமான 3.4 நொடிகளில் கடந்து செல்கிறது.
கார்பன் பைபரால் ஆன போனட், வேகத்திற்காக 20 அங்குல அலாய் சக்கரங்கள், போர்ஷின் விசேஷ சஸ்பென்ஷன் அமைப்பு, பிரீமியம் லெதர் சீட்டுகள் என பல அத்தியாவசிய அம்சங்களுடன் இந்த கார் வருகிறது.
இந்த கார், இந்திய சந்தையில் வெளியாகுமா என்பது குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.
இன்ஜின் 4 லிட்டர், 6 சிலிண்டர்ஹார்ஸ் பவர் 505 பி.எஸ்.,டார்க் 450 என்.எம்.,டாப் ஸ்பீடு 308 கி.மீ.,பிக்., அப் (1 - 100 கி.மீ.,) 3.4 நொடுகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!