'கியா இந்தியா' நிறுவனம், அதன் 'சோனெட்' கார் வரிசையில், புதிய 'ஆராக்ஸ்' எடிஷன் காரை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த கார், பெட்ரோல் மற்றும் டீசல் வகையில் வருகிறது. அதாவது, 1 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினும், 1.5 லிட்டர் டர்போ டீசல் இன்ஜினும் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன், மேனுவல் மற்றும் ஆட்டோ டிரான்ஸ்மிஷன்களிலும் வெளியாகிறது.
இது புதிய எடிஷன் கார் என்பதால், சிறு சிறு டிசைன் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மற்றபடி, சோனெட் வரிசையின், எச்.டி.எக்ஸ்., வகை காரில் இருக்கும் அதே அம்சங்கள் தான் கொடுக்கப்பட்டுள்ளன.
விலை 11.85 லட்சம் முதல் 13.45 லட்சம் வரை
இன்ஜின் 1 லிட்டர், டர்போ பெட்ரோல் 1.5 லிட்டர், டர்போ டீசல்
ஹார்ஸ் பவர் 120 பி.எஸ்., 116 பி.எஸ்.,
டார்க் 172 என்.எம்., 250 என்.எம்.,
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!