Load Image
Advertisement

'எக்ஸ் - 3 ' 'பி.எம்.டபுள்யு' அதிவேக கார்

'பி.எம்.டபுள்யு இந்தியா' நிறுவனம், அதன் 'எக்ஸ் - 3' வரிசையில், புதிய வகை செயல்திறன் காரை இந்திய சந்தையில் களமிறக்கியுள்ளது. இந்த 'எக்ஸ் - 3 எம்.340.ஐ.,' காரை முன்பதிவு செய்ய 5 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும்.

பி.எம்.டபுள்யு.,வின் செயல்திறன் வகை, 'எம் - ஸ்போர்ட்' உபகரணங்கள், இந்த காரில் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதாவது, எம் - ஸ்போர்ட் வகை கிட்னி கிரில், சைடு கண்ணாடிகள், எக்ஸாஸ்ட்டுகள், 20 அங்குல அலாய் சக்கரங்கள், சிவப்பு நிற பிரேக் கேலிப்பர்கள் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.

கூடுதலாக, 12.3 இன்போடெயின்மென்ட் அமைப்பு மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், பேனரோமிக் சன் ரூப், வயர்லெஸ் சார்ஜிங், உட்புற வண்ண அலங்கார லைட்டுகள் என பல அம்சங்கள் நிறைந்த காராக இது திகழ்கிறது.
விலை ரூ. 86.50 லட்சம்

இன்ஜின் (பெட்ரோல்) 3 லிட்டர், 6 சிலிண்டர், டர்போ சார்ஜிடுஹார்ஸ் பவர் 363 பி.எஸ்.,டார்க் 500 என்.எம்.,டாப் ஸ்பீடு 250 கி.மீ.,பிக்., அப் (0 - 100 கி.மீ.,) 4.9 நொடிகள்



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement