Load Image
Advertisement

'390 அட்வெஞ்சர்' கே.டி.எம்., பைக் சாகசம்

'கே.டி.எம்.,' நிறுவனம், அதன் '390 அட்வெஞ்சர்' என்ற சாகச பைக்கை புதுப்பித்து, மீண்டும் இந்தியாவில் களமிறக்கியுள்ளது.

ஆப்ரோடு பைக்குகளுக்கு வயர்டு ஸ்போக் சக்கரங்கள் மிகவும் அவசியமாகிறது. ஏனெனில், கற்கள், பாறைகள் உடைய பகுதிகளில் செல்லும்போது, சக்கரங்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படும். இதை எதிர்கொள்ளவே 19 மற்றும் 17 அங்குல வயர்டு ஸ்போக் சக்கரங்கள் இந்த பைக்கில் கொடுக்கப்பட்டுள்ளன. இதோடு, ட்யூப்லெஸ் டயர்கள் அல்லாமல், ட்யூப்டு ஆப்ரோடு டயர்கள் வழங்கப்பட்டுள்ளது, பெரும் ஏமாற்றத்தையே தந்துள்ளது.

இந்த பைக்கின் சிறப்பம்சமே, அதன் முன்புற அட்ஜெஸ்டபில் போர்க் சஸ்பென்ஷன்கள் தான். கரடுமுரடான பகுதிகளில் பைக்கிற்கு முதுகெலும்பாக செயல்படுகிறது. கூடுதலாக, 5 அங்குல டி.எப்.டி., டிஸ்ப்ளே, டிராக் ஷன் கன்ட்ரோல், கார்னரிங் ஏ.பி.எஸ்., குவிக் ஷிப்டர்கள் என பல ஆப்ரோடு அம்சங்கள் இதில் இருக்கின்றன.
விலை ரூ. 3.60 லட்சம்

இன்ஜின் 327 சி.சி., டி.ஒ.எச்.சி.,ஹார்ஸ் பவர் 43.5 பி.எஸ்.,டார்க் 37 என்.எம்.,மைலேஜ் 29.6 கி.மீ.,



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement